EVENT NEWS 2026

ஆஸ்திரேலிய பாதுகாப்பு கல்லூரியின் தூதுக்குழுவினர் தெற்கு கடற்படை கட்டளைத் தலைமையகத்திற்கு விஜயம்

10 Sep 2026

இலங்கையில் கல்விச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள, ஆஸ்திரேலிய பாதுகாப்பு கல்லூரியின் கர்னல் Adam Geoffrey McGuinness இன் தலைமையில் மற்றும் அக்கல்லூரியின் பாதுகாப்புப் படை கட்டளை மற்றும் மூலோபாய ஆய்வு பாடநெறியைப் பயிலும் மாணவ அதிகாரிகளைக் கொண்ட தூதுக்குழுவினர், இன்று (2026 செப்டம்பர் 10) தெற்கு கடற்படை கட்டளைத் தலைமையகத்திற்கு விஜயம் மேற்கொண்டனர்.

அதற்கமைய, இந்த சந்திப்பின் போது ஆஸ்திரேலிய பாதுகாப்பு கல்லூரி தூதுக்குழுவின் பிதானி உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகள், உத்தியோகபூர்வ சந்திப்பொன்றிற்காக தெற்கு கடற்படை கட்டளையின் பிரதித் தளபதி கொமடோர் அருண வீரசிங்கவைச் சந்தித்தனர். அங்கு, இரு தரப்பினருக்கும் இடையே இடம்பெற்ற சுமுகமான உரையாடலைத் தொடர்ந்து, கட்டளைத் தலைமையகத்தில் நடைபெற்ற சொற்பொழிவொன்றில் மாணவ அதிகாரிகள் உள்ளிட்ட ஆஸ்திரேலிய தூதுக்குழுவினர் கலந்துகொண்டனர்.

மேலும், இச்சந்திப்பைக் குறிக்கும் வகையில் நினைவுச் சின்னப் பரிமாற்றமும் இடம்பெற்றது.

Accessibility Tools