EVENT NEWS › 2026

கடற்படை தாதியர் கல்லூரியில் தாதியர் பயிற்சி நெறியை நிறைவு செய்த முப்படைகளைச் சேர்ந்த 40 பேருக்கு டிப்ளோமா சான்றிதழ்கள் வழங்கப்பட்டன

30 Sep 2026

ஜெனரல் சர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட, கொழும்பு கடற்படை பொது வைத்தியசாலையில் அமைந்துள்ள கடற்படை தாதியர் கல்லூரியில், 2024 ஆம் ஆண்டு ஆட்சேர்ப்பைச் சேர்ந்த முப்படைகளின் தாதியர் பயிலுநர்கள் நாற்பது (40) பேருக்கு டிப்ளோமா சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு, 2026 செப்டம்பர் 29 ஆம் திகதி ஜெனரல் சர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தின் பிரதி உபவேந்தர் (கல்வி) பேராசிரியர் சரித எல். குணசேகர அவர்களின் தலைமையில், அப்பல்கலைக்கழக வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இதன்படி, தாதியர் பயிற்சிப் பாடசாலையின் இரண்டு வருட தாதியர் டிப்ளோமா பாடநெறியின் எட்டாவது பாடநெறியை வெற்றிகரமாக நிறைவு செய்த கடற்படையைச் சேர்ந்த இருபத்தாறு (26) தாதியர்களுக்கும், இராணுவத்தைச் சேர்ந்த எட்டு (08) தாதியர்களுக்கும், விமானப்படையைச் சேர்ந்த ஆறு (06) தாதியர்களுக்கும் டிப்ளோமா சான்றிதழ்கள் இவ்வாறு வழங்கப்பட்டன.

மேலும், இந்த நிகழ்வில் கடற்படைப் பயிற்சிப் பணிப்பாளர் கொமடோர் ரஞ்சித் வல்கம்பாய, கடற்படை மருத்துவ மற்றும் சேவைகள் (நோய்த்தடுப்பு மற்றும் புனர்வாழ்வு) பணிப்பாளர் வைத்தியர் கொமடோர் ஏஎச். முல்லேகம, இலங்கை தாதியர் சங்கத்தின் தலைவர் திரு எம்.டபிள்யூ.ஏ. கீர்த்திரத்ன உள்ளிட்ட முப்படைகளின் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

Accessibility Tools