EVENT NEWS 2026

திருகோணமலை கடற்படைத் தளத்தில் அமைந்துள்ள விநாயகர் ஆலயத்தின் வருடாந்த தேர்த்திருவிழா வெற்றிகரமாக நடைபெற்றது

17 Sep 2026

திருகோணமலை கடற்படைத் தளத்தில் அமைந்துள்ள விநாயகர் ஆலயத்தின் வருடாந்த தேர்த்திருவிழா 2026 செப்டம்பர் 14 மற்றும் 15 ஆகிய இரு தினங்களிலும் கிழக்கு கடற்படை கட்டளையினால் ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்பட்டது. விநாயப் பெருமான் தேரில் ஆரோகணித்து வெளிவீதியுலாவாக கடற்படைத்தள வளாகத்தினூடாகவும் திருகோணமலை நகரின் வீதிகளினூடாகவும் பவனி வந்ததையடுத்து, வருடாந்த தேர்த்திருவிழா வெற்றிகரமாக நிறைவடைந்தது.

அதன்படி, மத நல்லிணக்கத்தைப் பிரதிபலிக்கும் வகையில், இலங்கை கடற்படை இந்து சங்கத்தின் அனுசரணையிலும், கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படை கப்பல் தள நிறுவனத்தின் கட்டளை அதிகாரியின் தலைமையிலும் ஏற்பாடு செய்யப்பட்ட இம்முறை விநாயகர் ஆலயத்தின் வருடாந்த தேர்த்திரு விழாவின் போது, கடற்படையினருக்கு ஆசீர்வாதம் வேண்டி இந்து சமய முறைப்படி வழிபாடுகள் இடம்பெற்றன. அதனைத் தொடர்ந்து, இந்து கலாசார நிகழ்வுகளுடன் விநாயகர் சிலையைத் தாங்கிய தேர் ஊர்வலமாக வீதிகளில் பவனி வந்தது.

மேலும், இந்நிகழ்வில் பிரதிப் பிரதான அதிகாரியும் கிழக்கு கடற்படை கட்டளையின் தளபதியுமான ரியர் அட்மிரல் புத்திக லியனகமகே உள்ளிட்ட அக் கட்டளையின் சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட அதிகாரிகள் மற்றும் கடற்படையினர், கடற்படை குடும்பங்களின் உறுப்பினர்கள், அத்துடன் பிரதேசத்தைச் சேர்ந்த இந்து பக்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

Accessibility Tools