இலங்கைக்கான இத்தாலிய தூதுவர் உத்தியோகபூர்வ சந்திப்பிற்காக இலங்கை கடற்படைத் தளபதியைச் சந்தித்தார்
இலங்கைக்கான இத்தாலிய தூதுவர் Damiano Francovigh அவர்கள் உத்தியோகபூர்வ சந்திப்பிற்காக இன்று (2026 செப்டம்பர் 02) கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோவைச் சந்தித்தார்.
இந்த உத்தியோகபூர்வ சந்திப்பின் போது, 27 ஆவது கடற்படைத் தளபதியாகப் பொறுப்பேற்றுக்கொண்ட வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ அவர்களுக்கு இத்தாலிய தூதுவர் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். அதனைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு உட்பட இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் குறித்து இத்தாலிய தூதுவரும் கடற்படைத் தளபதியும் சினேகபூர்வக் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
மேலும், இந்த உத்தியோகபூர்வ சந்திப்பைக் குறிக்கும் வகையில் இரு தரப்பினருக்கும் இடையே நினைவுப் பரிசுகளும் பரிமாறிக்கொள்ளப்பட்டன.
1 /
6













