‘டிட்வா’ அனர்த்தத்தினால் இடம்பெயர்ந்த குடும்பங்களுக்காகக் கடற்படையினரால் நிர்மாணிக்கப்பட்ட இடைக்கால வீடுகளைப் பார்வையிடுவதில் இலங்கைகான ஜப்பான் தூதுவர் பங்கேற்பு
திட்வா பேரழிவினால் பாதிக்கப்பட்ட நுவரெலியா ‘யூனிக் வியூ’ கிராமத்தைச் சேர்ந்த குடும்பங்களுக்காக இலங்கை கடற்படையின் உழைப்புப் பங்களிப்புடன் அமைக்கப்பட்ட இடைக்கால வீடுகளைப் பார்வையிடுவதற்காக, இலங்கைகான ஜப்பான் தூதுவர் அதிமேதகு Akio Isomata அவர்கள் 2026 செப்டம்பர் 18 ஆம் திகதி கலந்துகொண்டார். இந்நிகழ்வில் கடற்படைத் தளபதியைப் பிரதிநிதித்துவப்படுத்தி, மேற்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் ஹர்ஷ த சில்வா கலந்துகொண்டார்.
இலங்கையின் சூறாவளி பேரழிவிற்குப் பதிலளிப்பதற்கான அவசரக் கொடை" திட்டத்தின் கீழ், ஜப்பான் அரசு, சர்வதேச புலம்பெயர்வு அமைப்பு (IOM), யுனிசெஃப் (UNICEF) அமைப்பு மற்றும் இலங்கை அரசின் நிதிப் பங்களிப்புடனும், கடற்படையின் உழைப்புப் பங்களிப்புடனும் குறுகிய காலத்தில் அமைக்கப்பட்ட இந்த இடைக்கால வீட்டுத்திட்டம், கடந்த 2026 ஆகஸ்ட் 05 ஆம் திகதி நுவரெலியா 'யூனிக் வியூ' (Unique View) கிராமத்தில் பாதிக்கப்பட்ட முப்பத்தைந்து (35) குடும்பங்களிடம் கையளிக்கப்பட்டது.
இதற்கமைய, குறித்த இடைக்கால வீடுகளைப் பார்வையிடுவதற்காக வருகை தந்த இலங்கைகான கௌரவ ஜப்பான் தூதுவர் அவர்களினால், இவ்விஜயத்திற்கு இணைணையாக அவ்வீடுகளுக்கான பழுதுபார்ப்பு உபகரணத் தொகுதிகள் மற்றும் மெத்தை விரிப்புத் தொகுதிகள் என்பன வழங்கி வைக்கப்பட்டன.
மேலும், இந்நிகழ்வில் இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான சர்வதேச புலம்பெயர்வு அமைப்பின் (IOM) தலைமை செயல்பாட்டு அதிகாரி திருமதி Kristin Parco, கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் கௌரவ டொக்டர் மதுர செனவிரத்ன, பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் (அனர்த்த முகாமைத்துவம்) திரு. கே.ஜி. தர்மதிலக மற்றும் நுவரெலியா மாவட்ட செயலாளர் திருமதி ஆர்.ஏ.டி.டீ.என் தென்னகோன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.













