கிரிஉல்ல பள்ளேகம பாலத்தினடியில் சிக்கியிருந்த மரக்கட்டைகள் உள்ளிட்ட கழிவுகளை அகற்றும் நடவடிக்கையில் கடற்படை
குருநாகல் கிரிஉல்ல பிரதேசத்தில் மா ஓயா குறுக்கே கட்டப்பட்டுள்ள பள்ளேகம பாலத்தினடியில் சிக்கியிருந்த மரக்கட்டைகள் உள்ளிட்ட கழிவுகளை அகற்றும் நடவடிக்கை ஒன்றை, கடற்படையினர் இன்று (2026 செப்டம்பர் 15) வெற்றிகரமாக முன்னெடுத்தனர்.
மழை வானிலை காரணமாக நீரோட்டத்தில் அடித்து வரப்பட்ட குப்பைகள், மரக்கட்டைகள் மற்றும் மூங்கில் புதர்கள் உள்ளிட்ட கழிவுகள் மா ஓயா குறுக்கே கட்டப்பட்டுள்ள பள்ளேகம பாலத்தினடியில் சிக்கியதால் நீர் சீராக வடிந்து செல்வது தடைப்பட்டதுடன், அதனை உடனடியாக இயல்பு நிலைக்குக் கொண்டுவருவதற்காகக் கடற்படை இ நடவடிக்கைக்காக மேற்கு கடற்படை கட்டளையின் விசேட குழுவொன்றை ஈடுபடுத்தியது.
இதன்படி, கடற்படையின் சுழியோடிகளையும் உள்ளடக்கிய அந்த விசேட குழுவினால் முன்னெடுக்கப்பட்ட இந்நடவடிக்கையின் மூலம், பள்ளேவெல பாலத்தினடியில் சிக்கியிருந்த மரக்கட்டைகள் உள்ளிட்ட கழிவுகள் பெரும் பிரயத்தனத்திற்கு மத்தியில் அகற்றப்பட்டு, அப்பாலத்தின் ஊடாக மா ஓயாவின் நீர் சீராக வடிந்து செல்வதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.













