கடற்படை வீரர்களின் நலன்புரி வசதிகளை விரிவுபடுத்தும் திட்டம்
கடற்படை வீரர்களின் நலன்புரி வசதிகளை விரிவுபடுத்தும் நோக்கில், அவர்களின் நெருங்கிய உறவினர்களின் இறுதிச்சடங்குகளின் போது கடற்படை கட்டளைகளினூடாக வீரர்களுக்கு வசதிகளை வழங்கும் திட்டமொன்றை இலங்கை கடற்படை ஆரம்பித்துள்ளதுடன், இவ்வசதிகளைக் குறியீட்டு ரீதியாக கடற்படை கட்டளைகளுக்குக் கையளிக்கும் நிகழ்வு, இன்று (2026 செப்டம்பர் 16) கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ தலைமையில் கடற்படைத் தலைமையகத்தில் நடைபெற்றது.
இதன்படி, இலங்கை கடற்படையின் நலன்புரிப் பிரிவினால் ஆரம்பிக்கப்பட்ட இந்த நலன்புரி வசதிகளை விரிவுபடுத்தும் திட்டத்தின் மூலம், கடற்படை வீரர்களின் நெருங்கிய உறவினர்களின் இறுதிச்சடங்குகளுக்குத் தேவையான வசதிகளை அந்தந்தக் கட்டளைப் பிரிவுகளிலிருந்து விரைவாகப் பெற்றுக்கொள்ளக் கூடிய வாய்ப்பு ஏற்படுவதுடன், இதற்காகத் தேவையான 48 தற்காலிகக் கூடாரங்கள் (1,875) நாற்காலிகள் மற்றும் 14 காபி தயாரிக்கும் இயந்திரங்கள் என்பன இவ்வாறு கடற்படைத் தளபதியின் தலைமையில் கடற்படை கட்டளைகளுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டன.
மேலும், இந்நிகழ்வில் கடற்படை பிரதம அதிகாரி ரியர் அட்மிரல் ரவீந்திர திஸேரா, வடக்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் தம்மிக்க விஜேவர்தன, வடமேற்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் வருண பெர்னாண்டஸ், மேற்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் ஹர்ஷ டி சில்வா, தென்கிழக்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் சுஜீவ வீரசூரிய, வடமத்திய கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் இந்திக டி சில்வா மற்றும் பணிப்பாளர் நாயகம் (சேவைகள்) ரியர் அட்மிரல் இந்திக குணவர்தன உள்ளிட்ட கடற்படை நலன்புரிப் பிரிவின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் கடற்படையினர் பலர் கலந்துகொண்டனர்.













