இலங்கை கடற்படை கப்பல் லங்காபட்டின நிறுவனத்தின் 13வது ஆண்டு நிறைவுக்கு இணையாக, கடற்படை ஆட்சேர்ப்பை ஊக்குவிக்கும் நடைபயணம்
இலங்கை கடற்படை கப்பல் லங்காபடுன நிறுவனத்தின் 13 வது ஆண்டு நிறைவு 2026 செப்டம்பர் 12 அன்று வருகின்ற நிலையில், அதற்கு இணையாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கடற்படைக்கான புதிய ஆட்சேர்ப்பை ஊக்குவிக்கும் சிறப்பு நடைபயணம், 2026 செப்டம்பர் 10 ஆம் திகதி சேருவில நகரை அண்மித்த பகுதியில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
அதற்கமைய, இலங்கை கடற்படை கப்பல் லங்காபடுன நிறுவனத்தின் கட்டளை அதிகாரி கொமாண்டர் சுகத் பெர்னாண்டோ அவர்களின் மேற்பார்வையில், கடற்படையின் ஒழுக்கம், தொழில்சார் தகைமை மற்றும் பல்வேறு தொழில் வாய்ப்புக்கள் குறித்து பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட இளம் சந்ததியினரை விழிப்பூட்டுதலை நோக்கமாகக் கொண்டு, சேருவில நகரம் மற்றும் அதற்கு அண்மித்த பாடசாலைகளை உள்ளடக்கிய வகையில் இடம்பெற்ற இந்த நடைபயணத்திற்காக, கடற்படையின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த கடற்படை வீரர்கள் உட்பட, லங்காபடுன நிறுவனத்தின் 100 கடற்படை வீரர்கள் கலந்துகொண்டனர்.













