EVENT NEWS › 2026

திருகோணமலையில் இராணுவத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இரத்ததான முகாமில் கடற்படையினரின் பங்கேற்பு

21 Sep 2026

இலங்கை இராணுவத்தின் 1 வது விஜயபாகு காலாட்படை ரெஜிமென்ட்டின் 38 வது ஆண்டு நிறைவையொட்டி ஏற்பாடு செய்யப்பட்ட இரத்ததான முகாமில், இலங்கை கடற்படைக் கப்பலான ரன்வெலி நிறுவனத்தைச் சேர்ந்த கடற்படை வீரர்கள் 2026 செப்டம்பர் 21 ஆம் திகதி பங்குபற்றினர்.

திரிகோணமலை பொது வைத்தியசாலையின் மத்திய இரத்த வங்கியின் இரத்த இருப்பைப் பேணும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட இத்திட்டத்திற்குப் பங்களிப்பு வழங்கியமையின் மூலம், சமூக சுகாதாரத்தை மேம்படுத்துவதில் கடற்படையினரின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பு வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

Accessibility Tools