EVENT NEWS › 2026

கடற்படையால் நிறுவப்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையம் பொதுமக்களுக்கு கையளிக்கப்பட்டது

21 Sep 2026

கடற்படையின் சமூகப் பணித் திட்டத்தின் கீழ், கண்டி மாவட்டத்தின் மினிப்பே பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட புலத்வெல்கதுர கிராமத்தில் அமைக்கப்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையம் ஒன்று (01), 2026 செப்டம்பர் 18 ஆம் திகதி மக்கள் பயன்பாட்டிற்காகக் கையளிக்கப்பட்டது.

கடற்படையின் தொழில்நுட்ப பங்களிப்புடனும், சுகாதார அமைச்சின் முன்னெடுப்பிலும், Lion Nation Foundation (Guarantee) Limited நிறுவனத்தின் நிதி பங்களிப்புடனும் அமைக்கப்பட்ட இந்த நீர் சுத்திகரிப்பு நிலையம் குடிநீர் சுத்திகரிப்பு மையத்துடன் சேர்த்து, கடற்படையினரால் இதுவரை 1161 நீர் சுத்திகரிப்பு நிலையம் குடிநீர் சுத்திகரிப்பு மையங்கள் மக்கள் பயன்பாட்டிற்காகக் கையளிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, இவ்வாறு மக்கள் பயன்பாட்டிற்காகக் கையளிக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு மையத்தின் மூலம், மினிப்பே பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட புலத்வெல்கதுர கிராமத்தைச் சேர்ந்த பெருமளவிலான மக்களின் சுத்தமான குடிநீர் தேவையை இலகுவாகப் பூர்த்தி செய்துகொள்ள முடியும்.

Accessibility Tools