EVENT NEWS 2026

உதார கப்பலின் புதிய கட்டளை அதிகாரி கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்

18 Sep 2026

இலங்கை கடற்படையின் உதார கப்பலின் புதிய கட்டளை அதிகாரியாக நியமிக்கப்பட்ட கமாண்டர் தேசப்ரிய மல்தெனிய திருகோணமலை கடற்படை கப்பல் தளத்தின் ‘CNAD’ தளடையில் அக்கப்பலின் கட்டளை அதிகாரி பதவியின் கடமைகளை உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

அதன்படி, கடற்படை மரபுகளுக்கு அமைவாக புதிய கட்டளை அதிகாரி இலங்கை கடற்படையின் உதார கப்பலுக்கு வரவேற்கப்பட்ட பின்னர், அக்கப்பலின் கட்டளை அதிகாரியாகப் பணியாற்றிய கமாண்டர் சுரங்க கொடிகாரவினால் உத்தியோகபூர்வமாக புதிய கட்டளை அதிகாரியிடம் கடமைகள் ஒப்படைக்கப்பட்டன. இந்நிகழ்வில் கடற்படை நடவடிக்கைக் கட்டளையின் கொடி அதிகாரி ரியர் அத்பிரால் ஹரித ஜயதேவ கலந்துகொண்டார்.

2000 ஜூன் மாதம் 11 ஆம் திகதி அதிகாரம் அளிக்கப்பட்ட இலங்கை கடற்படைக்குச் சொந்தமான உதார கப்பல், (2026 செப்டம்பர் 18) இலங்கை கடற்படையின் செயல்பாட்டு மற்றும் தேசிய பொறுப்புகளை நிறைவேற்றுவதில் விதிவிலக்கான பங்களிப்பை வழங்கி வருகிறது.

Accessibility Tools