EVENT NEWS 2026

ரணரிசி மற்றும் அபீத II ஆகிய கப்பல்களின் புதிய கட்டளை அதிகாரிகள் கடமைகளைப் பொறுப்பேற்றனர்

18 Sep 2026

இலங்கை கடற்படையின் ரணரிசி மற்றும் அபீத II ஆகிய கப்பல்களின் புதிய கட்டளை அதிகாரியாக நியமிக்கப்பட்ட கமாண்டர் மங்கள கருணாரத்ன திருகோணமலை கடற்படை கப்பல் தளத்தின் ‘CNAD’ தளடையில் அக்கப்பல்களின் கட்டளை அதிகாரி பதவியின் கடமைகளை உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

அதன்படி, கடற்படை மரபுகளுக்கு அமைவாக புதிய கட்டளை அதிகாரி இலங்கை கடற்படையின் ரணரிசி மற்றும் அபீதா ஆகிய கப்பல்களுக்கு வரவேற்கப்பட்ட பின்னர், அக்கப்பல்களின் கட்டளை அதிகாரியாகப் பணியாற்றிய கமாண்டர் லக்ருவன் ஜினசேனவினால் உத்தியோகபூர்வமாக புதிய கட்டளை அதிகாரியிடம் கடமைகள் ஒப்படைக்கப்பட்டதுடன், இந்நிகழ்வில் கடற்படை நடவடிக்கைக் கட்டளையின் கொடி அதிகாரி ரியர் அத்மிரால் ஹரித ஜயதேவ கலந்துகொண்டார்.

1992 ஜூலை 14 ஆம் திகதி சேவையில் இணைக்கப்பட்ட இலங்கை கடற்படையின் ரணரிசி மற்றும் 2000 ஜூன் 11 அன்று சேவையில் இணைக்கப்பட்ட அபீதா II ஆகிய கப்பல்கள்,இன்றைய தினம் (2026 செப்டம்பர் 18) கடற்படையின் செயல்பாடுகள் மற்றும் தேசியப் பொறுப்புகளை நிறைவேற்றுவதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி வருகின்றன.

Accessibility Tools