EVENT NEWS 2026

ஜெனரல் சர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ரியர் அட்மிரல் தம்மிக குமார சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்

02 Sep 2026

ஜெனரல் சர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் ஐந்தாவது (05) துணைவேந்தராக கடமையாற்றிய ரியர் அட்மிரல் தம்மிக குமார, 2026 செப்டம்பர் 01 ஆம் திகதி அப் பதவியிலிருந்து ஓய்வு பெற்றார்.

இலங்கை கடற்படையில் மூன்று தசாப்தங்களுக்கும் மேலான சேவையைக் கொண்ட ரியர் அட்மிரல் தம்மிக குமார, 2023 செப்டம்பர் 01 ஆம் திகதி ஜெனரல் சர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் ஐந்தாவது (05) துணைவேந்தராக நியமிக்கப்பட்டதுடன், அப் பதவியில் மூன்று (03) ஆண்டுகள் பணியாற்றியதன் பின்னர் இவ்வாறு ஓய்வு பெற்றார்.

மேலும், ஜெனரல் சர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் பணியாளர்களால் ரியர் அட்மிரல் தம்மிக குமார அவர்களுக்கு வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, அவருக்கு இராணுவ பாரம்பரியத்திற்கு அமைவாக சிறப்பு அணிவகுப்பு மரியாதை வழங்கி கௌரவிக்கப்பட்டது.

Accessibility Tools