EVENT NEWS 2026

பிராந்திய கடல்சார் தகவல் மையங்களின் பிரதிநிதிகள் குழு ஒன்று கொழும்பு தகவல் இணைப்பு மையத்திற்கு விஜயம்

15 Sep 2026

கடல்சார் தகவல் பரிமாற்றத்தில் உள்ள பொதுவான சவால்கள், அனுபவங்கள் மற்றும் தகவல் பகிர்வை வலுப்படுத்துவதற்கான நடைமுறை அணுகுமுறைகள் குறித்த அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும் நோக்கில், மடகாஸ்கரின் பிராந்திய கடல்சார் தகவல் ஒருங்கிணைப்பு மையம் (RMIFC), சிஷெல்ஸின் பிராந்திய ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளுக்கான மையம் (RCOC) மற்றும் International Criminal Police Organization (INTERPOL) அமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தி வருகை தந்த பிரதிநிதிகள் குழுவினர், 2026 செப்டம்பர் 14 மற்றும் 15 ஆகிய திகதிகளில் கொழும்பு தகவல் இணைப்பு மையத்திற்கு (IFC Colombo) விஜயம் ஒன்றை மேற்கொண்டனர்.

இவ்விஜயத்தின் போது, தரப்பினருக்கு இடையே அறிவு மற்றும் பயனுள்ள நடவடிக்கைகள் குறித்த அனுபவங்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டதுடன், கடல்சார் தகவல் இணைப்பு தொடர்பான பொதுவான சவால்களை அடையாளங்காணல் மற்றும் தகவல் பரிமாற்ற பொறிமுறையை மேலும் வலுப்படுத்துவது குறித்தும் கருத்துக்கள் பரிமாறப்பட்டன. மேலும், கடல்சார் தகவல் ஒருங்கிணைப்பு மையங்களுக்கும் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் நிறுவனங்களுக்கும் இடையே பயனுள்ள ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்பின் முக்கியத்துவம் குறித்தும் இவ்விஜயத்தின் போது கவனம் செலுத்தப்பட்டது.

மேலும், இவ்விஜயத்தில் மடகாஸ்கரின் பிராந்திய கடல்சார் தகவல் ஒருங்கிணைப்பு மையத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி இரண்டு பிரதிநிதிகளும், சிஷெல்ஸின் பிராந்திய ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளுக்கான மையத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி இரண்டு பிரதிநிதிகளும், INTERPOL அமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தி மூன்று பிரதிநிதிகளும், கொழும்பு தேசிய மத்திய பணியகத்தைப் (NCB Colombo) பிரதிநிதித்துவப்படுத்தி ஒரு இணைப்பு அதிகாரியும் கலந்துகொண்டனர்.

Accessibility Tools