SLINEX - 2026 இந்திய-இலங்கை கடற்படைப் பயிற்சிக்கு பங்கேற்பதற்காக சிதுரல கப்பல் தீவிலிருந்து புறப்பட்டது
இலங்கை கடற்படை மற்றும் இந்திய கடற்படை இடையே நடைபெறும் SLINEX - 2026 இருதரப்பு கடற்படைப் பயிற்சிக்குப் பங்கேற்பதற்காக இலங்கை கடற்படைக் கப்பல் சிதுரல இன்று (2026 செப்டம்பர் 11) தீவிலிருந்து புறப்பட்டது.
இந்திய மற்றும் இலங்கை கடற்படைகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு, பரஸ்பர செயற்பாட்டுத் திறன் மற்றும் தொழில்சார் அனுபவப் பரிமாற்றம் ஆகியவற்றை மேலும் வலுப்படுத்தும் நோக்கத்துடன் இந்த இருதரப்பு கடற்படைப் பயிற்சி ஆண்டுதோறும் நடத்தப்படுவதுடன், இவ் வருட பயிற்சி 2026 செப்டம்பர் 14 முதல் 18 வரை இந்தியாவின் விசாகப்பட்டினத்தில் நடைபெறவுள்ளது.
அதற்கமைய, 'SLINEX - 2026' கூட்டுப் பயிற்சியில் இலங்கை கடற்படையைப் பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொள்வதற்காக சிதுரல கப்பல் இவ்வாறு தீவிலிருந்து புறப்பட்டதுடன், கடற்படை முறைப்படியான கப்பலின் புறப்பாடு, கடற்படை செயற்பாடுகளின் பணிப்பாளர் கொமடோர் அதுல ஜெயவீரவின் மேற்பார்வையின் கீழ் கொழும்பு துறைமுகத்தில் இடம்பெற்றது.













