EVENT NEWS 2026

இலங்கை கடற்படை சங்கத்தின் 47வது ஆண்டுவிழா மற்றும் பொதுக்குழு கூட்டம் வெலிசரயில் நடைபெறுகிறது

20 Sep 2026

இலங்கை கடற்படை சங்கத்தின் தலைவரான ரியர் அட்மிரல் ஏ.ஆர். அமரசிங்க (ஓய்வு) அவர்களின் அழைப்பின் பேரில், கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ அவர்களின் தலைமையில், அச்சங்கத்தின் 47வது ஆண்டுவிழா மற்றும் வருடாந்த பொதுக்குழு கூட்டம் 2026 செப்டம்பர் 19 ஆம் திகதி வெலிசர Wave n' Lake விழா மண்டபத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது.

இந்தப் 47வது ஆண்டுவிழா மற்றும் வருடாந்த பொதுக்குழு கூட்டத்தில் உரையாற்றிய கடற்படை தளபதி, கடற்படையின் பல்வேறு தலைமுறைகளைப் பிரதிநிதித்துவப்படுத்திய அதிகாரிகள் மற்றும் பரந்த கடற்படைக் குடும்பத்தின் உறுப்பினர்களை ஒன்று சேர்க்கும் இந்த ஆண்டு விழா நிகழ்வில் கடற்படை சங்கத்தின் காப்பாளராகக் கலந்துகொள்ளக் கிடைத்தமையை பெரும் பாக்கியமாகக் கருதுவதாகத் தெரிவித்தார். அங்கு மேலும் கருத்து தெரிவித்த கடற்படை தளபதி, தேசிய பாதுகாப்பிற்கு இணையாக தேசிய அபிவிருத்திக்கு பங்களிப்பது உட்பட, புதிய சவால்கள் மற்றும் பொறுப்புகளை எதிர்நோக்கி கடற்படை முன்னோக்கிச் செல்லும்போது, சிரேஷ்ட உறுப்பினர்களின் அனுபவமும் புரிதலும் ஒரு முக்கிய வழிகாட்டலாக அமையும் என்றும், இதன் மூலம் கடற்படையின் பாரம்பரியங்களைப் பாதுகாக்கவும், அனுபவங்கள் வாயிலாகக் கற்றுக்கொள்ளவும், கடற்படை சேவையின் மதிப்புகளை ஒரு தலைமுறையிலிருந்து மற்றொரு தலைமுறைக்குத் தொடர்ச்சியாகக் கையளிக்கவும் முடியும் என்று தெரிவித்தார்.

மேலும், இந்த 47வது ஆண்டுவிழா மற்றும் வருடாந்த பொதுக்குழு கூட்டத்தில் அச்சங்கத்தின் உபத்தலைவர் உட்பட செயற்குழு உறுப்பினர்கள், ஓய்வுபெற்ற கடற்படை தளபதிகள், கடற்படை பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் ரவீந்திர திசேரா, ஓய்வுபெற்ற சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் கடற்படை வீரர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

Accessibility Tools