EVENT NEWS 2026

கடமையின் போது உயிரிழந்த லெப்டினன்ட் திலின உதயப்பிரியவுக்கு கடற்படை தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது

06 Sep 2026

2026 ஆகஸ்ட் 15 ஆம் திகதி அங்குலானை கடல் பகுதியில் இலங்கை கடற்படையின் P 4447 டோரா படகு விபத்துக்குள்ளான போது, கடமையில் ஈடுபட்டிருந்த வேளையில் துரதிர்ஷ்டவசமாக உயிர்த்தியாகம் செய்த அப்படகின் இரண்டாம் கட்டளை அதிகாரி லெப்டினன்ட் திலின உதயப்பிரியவின் மறைவையிட்டு இலங்கை கடற்படை தனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

நாட்டிற்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றிய இந்த இளம் கடற்படை அதிகாரியின் பிரிவால் துயருறும் அன்னாரின் குடும்பத்தினருக்கும், சக அதிகாரிகளுக்கும், உற்றார் உறவினர்களுக்கும் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ நேரில் சென்று தனது இறுதி மரியாதையைச் செலுத்தியதுடன், இந்தத் துயரமான தருணத்தில் முழு கடற்படையும் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.

லெப்டினன்ட் திலின உதயபிரிய கடற்படைக்கு ஆற்றிய அர்ப்பணிப்பான சேவையைப் பாராட்டும் வகையில், இலங்கை கடற்படை அதிகாரி ஒருவருக்கு உரிய முழுமையான கடற்படை மரியாதைகள், கௌரவம் மற்றும் அரச உத்தியோகபூர்வ மரியாதைகளுடன் அவரது இறுதிச் சடங்குகள் நடைபெறவுள்ளன.

லெப்டினன்ட் திலின உதயபிரிய 2020 ஆகஸ்ட் 19 ஆம் திகதி 63 ஆவது ஆட்சேர்ப்பின் கெடட் (Cadet Officer) அதிகாரியாக இலங்கை கடற்படையில் இணைந்து கொண்டதுடன், அன்றிலிருந்து அவர் தேசத்திற்காக அர்ப்பணிப்புடனும் பொறுப்புடனும் தனது சேவையை ஆற்றியுள்ளார்.

மறைந்த லெப்டினன்ட் திலின உதயபிரியவின் இறுதிச் சடங்குகள் நாளை (2026 செப்டம்பர் 07) வேரஹெர பொது மயானத்தில் நடைபெறவுள்ளன.

Accessibility Tools