நயினாதீவு கடல் பகுதியில் கவிழ்ந்த பயணியர் படகில் இருந்தவர்களை மீட்க கடற்படையினரின் உதவி

16 Aug 2026

2026 ஆகஸ்ட் மாதம் 16 ஆம் திகதி மாலை வேளையில் நயினாதீவு கடல் பகுதியில் பயணியர் படகொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறிந்து நிவாரணம் வழங்குவதற்காக இலங்கை கடற்படையினரால் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது. அப்படகில் எட்டு (08) பயணியரும் இரண்டு (02) படகோட்டிகளும் பயணித்துள்ளனர்.

இப்படகு 2026 ஆகஸ்ட் மாதம் 16 ஆம் திகதி பிற்பகல் 1530 மணியளவில் குறிகாட்டுவான் இறங்குத்துறையிலிருந்து நெடுந்தீவு நோக்கிப் புறப்பட்டுள்ளதுடன், அது குறித்த இலக்கைச் சென்றடையாததால் அதிகாரிகள் அது தொடர்பான தேடுதல் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.

அதற்கமைய, அப்படகு விபத்துக்குள்ளாகியுள்ளது எனப் பெறப்பட்ட தகவலுக்கு அமைய, சீற்றமான கடல் அலைகளுக்கு மத்தியிலும் காணாமல்போன படகைக் கண்டறிவதற்காக உடனடித் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையை ஆரம்பிக்கக் கடற்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதனிடையே, படகு கவிழ்ந்ததைத் தொடர்ந்து அதிலிருந்த அனைத்துப் பயணியரும் படகோட்டிகளும் நயினாதீவு நோக்கி நீந்தி கரையைச் சென்றடைய முடிந்துள்ளதுடன், பின்னர், விபத்துக்குள்ளான நபர்களுக்குத் தேவையான மேலதிக மருத்துவச் சிகிச்சைகளை வழங்குவதற்காக அவர்களை நயினாதீவிலிருந்து யாழ்ப்பாணம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லக் கடற்படையினர் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

Accessibility Tools