நெடுந்தீவுக்கு அருகே தரைதட்டிய இந்திய மீன்பிடிக் கப்பலை மீட்கும் பணியை இலங்கை கடற்படை தொடங்கியது.

06 Aug 2026

இலங்கையின் எல்லைக்குட்பட்ட கடல் எல்லைக்குள் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தபோது, நெடுந்தீவின் தெற்கே உள்ள ஒரு பவளப்பாறையில் தரைதட்டிய இந்திய மீன்பிடிக் கப்பலை (IND.TN.10.MM.9381) மீட்பதற்கான நடவடிக்கையை இலங்கை கடற்படை இன்று (06 ஆகஸ்ட் 2026) தொடங்கியுள்ளது.

இந்த இந்திய மீன்பிடி படகு எல்லைச் சட்டங்களை மீறி சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போதே இவ்வாறு பாறையில் மோதியதாக தெரிவிக்கப்படுகிறது.

இப்படகில் 11 இந்திய மீனவர்கள் இருப்பதுடன், பாறையில் மோதியதன் காரணமாக படகு பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன், யாருக்கும் உயிராபத்து இல்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

மீனவர்களைப் பாதுகாப்பாக மீட்கும் நடவடிக்கைகளில் இலங்கை கடற்படை தற்போது ஈடுபட்டு வருகிறது.

Accessibility Tools