சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள் மற்றும் கடத்தல் செயற்பாடுகளைத் தடுக்கும் நடவடிக்கைகள் மூலம் 47 பேர் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டனர்
இலங்கை கடற்படையினரால், 2026 ஒக்டோபர் 17 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதியில், கடற்பரப்பை உள்ளடக்கிய வகையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் மூலம், சட்டவிரோத முறைகளைப் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 47 நபர்கள், 11 டிங்கி படகுகள் மற்றும் 02 வள்ளங்கள் கைப்பற்றப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
அதன்படி, திருகோணமலை இறக்கண்டி, கரையவேலி, காத்தான்குடி, மாங்காடு, சவுக்கடி, ஜயநகர், ஜின்னபுரம், சல்லிக்கோவில், போல் பொயிண்ட், சப்பல் பொயிண்ட், பிளாக் ஸ்டாப், போல்டர் பொயிண்ட் , யாழ்ப்பாணம் காங்கேசன்துறை மற்றும் முல்லைத்தீவு வெட்டித்தலத்தீவு ஆகிய கரையோர மற்றும் கடற்பிரதேசங்களை உள்ளடக்கிய வகையில், கிழக்கு, வடக்கு மற்றும் வடமத்திய கடற்படை கட்டளைகளினால் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
மேலும், இந்நடவடிக்கைகளின் மூலம் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள், மீன்பிடிப் படகுகள் மற்றும் தடைசெய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்கள் ஆகியன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக திருகோணமலை, மட்டக்களப்பு, வாழைச்சேனை, குச்சவெளி, கோட்பே, யாழ்ப்பாணம் மயிலிட்டி மற்றும் மன்னார் ஆகிய இடங்களிலுள்ள கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்கள அலுவலகங்களிடம் ஒப்படைக்கப்பட்டன.













