சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட 38 கிலோகிராம் பீடி இலைத் தொகை சட்டத்தின் பிடியில்
இலங்கைக் கடற்படையினரால் சிலாவத்துறை பந்தரவெளி கடற்கரைப் பிராந்தியத்தில் இன்றைய தினம் (2026 ஒக்டோபர் 26) மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குக் கொண்டு வரப்பட்ட 38 கிலோகிராம் பீடி இலைத் தொகை கைப்பற்றப்பட்டுள்ளது.
அதற்கமைய, வடமேற்கு கடற்படை கட்டளைக்கு உட்பட்ட இலங்கை கடற்படை கப்பல் தேரபுத்த நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்ட இந்த விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, பந்தரவெளி கடற்கரைப் பிரதேசத்தில் இருந்த சந்தேகத்திற்கிடமான பொதி ஒன்று (01) பரிசோதிக்கப்பட்டது. இதன் போது சுமார் முப்பத்து எட்டு (38) கிலோகிராம் பீடி இலைத் தொகை கடற்படைப் பொறுப்புக்குக் கொண்டுவரப்பட்டதுடன், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் மதுவரித் திணைக்களத்திடம் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
1 /
6













