சட்டவிரோதமாக நாட்டிற்குக் கொண்டு வரப்பட்ட சுமார் 336 கிலோகிராம் பீடி இலைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன

02 Oct 2026

இலங்கை கடற்படையினரால், 2026 ஒக்டோபர் மாதம் 02 ஆம் திகதி கற்பிட்டி, கீரிமுந்தலம் கடற்கரைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போது, சட்டவிரோதமாக நாட்டிற்குக் கொண்டு வரப்பட்ட சுமார் முந்நூற்று முப்பத்தாறு (336) கிலோகிராம் பீடி இலைகள் கைப்பற்றப்பட்டு சட்டத்தின் பிடிக்குள் கொண்டு வரப்பட்டன.

அதன்படி, வடமேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படைக் கப்பல் விஜய நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட இந்த விசேட தேடுதல் நடவடிக்கையின்போது, கீரிமுந்தலம் கடற்கரைப் பகுதியில் காணப்பட்ட சந்தேகத்திற்கிடமான இருபத்திரண்டு (22) பொதிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதன்போது, சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வரப்பட்டு, கடற்படையினரின் நடவடிக்கைகளுக்கு அஞ்சி கடத்தல்காரர்களால் கைவிடப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் முந்நூற்று முப்பத்தாறு (336) கிலோகிராம் பீடி இலைகள் கைப்பற்றப்பட்டு சட்டத்தின் பிடிக்குள் கொண்டு வரப்பட்டன.

மேலும், இந்த நடவடிக்கையின்போது கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் அடங்கிய பொதிகள், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கற்பிட்டி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன.

Accessibility Tools