மோசமான வானிலை காரணமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கடற்படையினரால் நிவாரணம் வழங்கும் நடவடிக்கைகள்

24 Sep 2026

சீரற்ற வானிலை காரணமாக பெய்து வரும் கனமழை காரணமாக கிங் கங்கை பெருக்கெடுத்து ஓடுவதனால், காலி மாவட்டத்தின் மாபலகம - பிடிகலை வீதி நீரில் மூழ்கியுள்ளதுடன், அப்பகுதியில் கடமையிலீடுபடுத்தப்பட்டுள்ள கடற்படை பேரழிவு நிவாரணக் குழுவினரால் இன்று (2026 செப்டம்பர் 24) அப்பகுதி மக்கள் பாதுகாப்பாகப் பயணிப்பதற்குத் தேவையான உதவிகள் வழங்கப்பட்டன.

மேலும், சீரற்ற வானிலையால் பாதிக்கப்படும் மக்களுக்குத் தேவையான நிவாரணங்களை வழங்குவதற்காக தெற்கு மாகாணத்தின் தவலம, ஹினிதும, மாபலகம, தொடம்கொட, உடுகம, நாகொடை மற்றும் ஹபரகொடை ஆகிய பகுதிகளுக்கு ஏழு (07) கடற்படை பேரழிவு நிவாரணக் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

அத்துடன், நாவலப்பிட்டி பகுதியில் இரண்டு (02) குழுக்களும், யட்டியாந்தோட்டை பகுதியில் இரண்டு (02) குழுக்களும், சீதாவாக்கை பகுதியில் இரண்டு (02) குழுக்கள் மற்றும் இரத்தினபுரி பகுதியில் மூன்று (03) குழுக்கள் என மொத்தம் ஒன்பது (09) பேரழிவு நிவாரணக் குழுக்கள் தேவைக்கு ஏற்ப ஈடுபடுத்துவதற்காக நிலைநிறுத்தப்பட்டுள்ளன.

Accessibility Tools