யாழ்ப்பாணம் குருநகர் பகுதிக்கு அப்பாலுள்ள கடலில் 192 கிலோகிராமுக்கும் மேற்பட்ட வெளிநாட்டு கஞ்சா கடற்படையினரால் கைது
இலங்கை கடற்படையினரால் இன்று (2026 செப்டம்பர் 24) யாழ்ப்பாணம் குருநகர் பகுதிக்கு அப்பாலுள்ள கடலில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு சோதன நடவடிக்கையின் போது, 192 கிலோகிராமுக்கும் மேற்பட்ட வெளிநாட்டு கஞ்சா தொகுதியுடன் டிங்கி படகு ஒன்றும் (01) சந்தேகநபர் ஒருவரும் (01) கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
இதன்படி, வடக்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் வேளுசுமன நிறுவனத்திற்கு கிடைத்த நம்பகமான தகவலுக்கு அமைய, யாழ்ப்பாணம் குருநகர் களப்பு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இந்த சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, ஏழு (07) உரைகளில் சுமார் எண்பத்தெட்டு (88) பார்சல்களாக அடைக்கப்பட்டிருந்த வெளிநாட்டு கஞ்சா தொகுதியுடன், அந்த டிங்கி படகும் (01) சந்தேகநபர் ஒருவரும் (01) இவ்வாறு கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
மேலும், கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட அந்த வெளிநாட்டு கஞ்சா தொகுதி, சந்தேகநபர் மற்றும் டிங்கி படகு ஆகியவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணப் பிராந்திய பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டன.













