சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்ய முயன்ற வெளிநாட்டு மின்னணு சிகரெட்டுகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது

02 Sep 2026

இலங்கை கடற்படை, மிரிஹான மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவுடன் இணைந்து கொழும்பு வெல்லம்பிட்டிய பகுதியில் 2026 செப்டம்பர் 02 ஆம் திகதி நடத்திய சிறப்பு கூட்டுச் சோதனை நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்ய முயன்ற வெளிநாட்டுச் சிகரெட் தொகுதியுடன் சந்தேகநபர் ஒருவரைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதன்படி, மேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் ரங்கல நிறுவனம், மிரிஹான மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவுடன் இணைந்து கொழும்பு வெல்லம்பிட்டிய பகுதியில் நடத்திய இந்தச் சிறப்புச் சோதனை நடவடிக்கையின் போது, சந்தேகத்திற்கிடமான நபர் ஒருவர் (01) சோதனைக்குட்படுத்தப்பட்டார். இதன்போது, சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்ய முயன்ற 130 மின்னணுச் சிகரெட்டுகள் மற்றும் மோட்டார் வாகனத்துடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.

மேலும், இந்த கூட்டு நடவடிக்கையின் மூலம் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 26 வயதுடைய வெல்லம்பிட்டிய பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அத்துடன், அந்தச் சந்தேகநபர், மின்னணு சிகரெட்டுகள் மற்றும் மோட்டார் வாகனம் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக வெல்லம்பிட்டிய பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

Accessibility Tools