வென்னப்புவயில் சட்டவிரோத மதுபானத் தொகையுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது

05 Sep 2026

இலங்கை கடற்படை, கடலோரப் பாதுகாப்புத் திணைக்களம் மற்றும் வென்னப்புவ பொலிஸார் இணைந்து, 2026 செப்டம்பர் 04 ஆம் திகதி வென்னப்புவ - நைனாமடம் பகுதியில் மேற்கொண்ட கூட்டுத் தேடுதல் நடவடிக்கையின் மூலம், சட்டவிரோத மதுபானத் தொகையுடன் இரண்டு (02) சந்தேகநபர்கள் கைது.

அதற்கமைய, கடலோரப் பாதுகாப்புத் திணைக்களத்திற்குக் கிடைத்த நம்பகமான தகவலின்படி, கடற்படை மற்றும் வென்னப்புவ பொலிஸார் இணைந்து, வென்னப்புவ - நைனாமடம் கிங்ஓயா பிரதேசத்திற்கு அருகில் மேற்கொண்ட இந்த விசேட கூட்டுத் தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோத உள்நாட்டு மதுபான உற்ப்பத்திக்குப் பயன்படுத்தப்படும் 'கோடா' எனப்படும் மூலப்பொருள் நிரப்பப்பட்ட 3 பீப்பாய்கள் மற்றும் முந்நூறு (300) லிட்டர், 5 வெற்றுப் பீப்பாய்கள், சட்டவிரோத மதுபானம் நிரப்பப்பட்ட இரண்டு (02) கேன்கள் மற்றும் எண்பது (80) லிட்டர், அத்துடன் இரண்டு (02) செப்புக் சுருள்கள் ஆகியவற்றுடன் இரண்டு (02) சந்தேகநபர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நடவடிக்கையின் மூலம் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 38 வயதுடைய, வாய்க்கால் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அந்த சந்தேகநபர்கள், சட்டவிரோத மதுபானத் தொகை மற்றும் ஏனைய உபகரணங்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக வென்னப்புவ பொலிஸ் நிலையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Accessibility Tools