மன்னாரில் ஆம்பர்கிரிஸ் (Ambergris) தொகையுடன் 02 சந்தேகநபர்கள் கைப்பற்றப்பட்டனர்

12 Sep 2026

இலங்கை கடற்படையினரால் மன்னார் சௌத்பார் கடற்கரைப் பகுதியில் 2026 செப்டம்பர் 11 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, தாவர, விலங்கினப் பாதுகாப்புச் சட்டம் பிரகாரம் வர்த்தக ரீதியான பயன்பாட்டிற்கு தடைசெய்யப்பட்ட ஆம்பர்கிரிஸ் (Ambergris) தொகையுடன் இரண்டு (02) சந்தேகநபர்கள் கைப்பற்றப்பட்டனர்.

இதற்கமைய, வடமத்திய கடற்படைக் கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் கஜபா நிறுவனத்தால் மன்னார் சௌத்பார் கடற்கரைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இந்த விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக சேகரிக்கப்பட்டு கடத்தப்படவிருந்த 67 கிலோகிராம்களுக்கும் அதிகமான திமிங்கிலத்தின் ஆம்பர்கிரிஸ் (Ambergris) தொகையுடன் இரண்டு (02) சந்தேகநபர்கள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டனர்.

மேலும், இந்த நடவடிக்கையின் மூலம் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட சந்தேகநபர்கள் 25 மற்றும் 36 வயதுடைய மன்னார் பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அந்த சந்தேகநபர்களும் ஆம்பர்கிரிஸ் தொகையும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் வனஜீவராசிகள் திணைக்கள அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Accessibility Tools