இலங்கை கடற்படையின் கட்டளைகளுக்கிடையிலான ரக்பி போட்டித் தொடர் வெற்றிகரமாக நிறைவுற்றது
கடற்படை கட்டளைகளுக்கு இடையிலான ரக்பி போட்டித் தொடர் - 2026, இம்முறை வடக்கு கடற்படைக் கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் உத்தற நிறுவன ரக்பி மைதானத்தில் 2026 ஜூலை மாதம் 08 ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரை வெற்றிகரமாக நடைபெற்றதுடன், அதன் ஆண்கள் பிரிவின் சாம்பியன் பட்டத்தை கப்பற்படைக் கட்டளையும் பெண்கள் பிரிவின் சாம்பியன் பட்டத்தை பயிற்சிக் கட்டளையும் வென்றெடுத்தன.
இதற்கமைய, இப்போட்டித் தொடரின் ஆண்கள் பிரிவின் இறுதிப் போட்டி கப்பற்படைக் கட்டளை மற்றும் கிழக்கு கடற்படைக் கட்டளை ஆகிய அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இதில் திறமையாக விளையாடிய கப்பற்படைக் கட்டளை அணியானது 12 - 10 என்ற புள்ளிகள் கணக்கில் கிழக்கு கடற்படைக் கட்டளை அணியைத் தோற்கடித்து, இம்முறை கட்டளைகளுக்கு இடையிலான ஆண்கள் ரக்பி சாம்பியன் பட்டத்தை வென்றெடுத்ததுடன், அதன் இரண்டாமிடத்தை கிழக்கு கடற்படைக் கட்டளை பெற்றுக்கொண்டது.
பயிற்சிக் கட்டளை மற்றும் வடக்கு கடற்படைக் கட்டளை ஆகிய அணிகளுக்கு இடையே நடைபெற்ற பெண்கள் பிரிவின் இறுதிப் போட்டியில் 05 - 0 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்ற பயிற்சிக் கட்டளை அணியானது, கட்டளைகளுக்கு இடையிலான பெண்கள் ரக்பி சாம்பியன் பட்டத்தை வென்றதுடன், வடக்கு கடற்படைக் கட்டளை அதன் இரண்டாமிடத்தைப் பெற்றுக்கொண்டது.
கட்டளைகளுக்கு இடையிலான ரக்பி போட்டித் தொடர் - 2026 இன் ஆண்கள் பிரிவின் (Plate) சாம்பியன் பட்டத்தை பயிற்சிக் கட்டளை அணியும், அதன் இரண்டாமிடத்தை வடக்கு கடற்படைக் கட்டளை அணியும் பெற்றுக்கொண்டன. அத்துடன், பெண்கள் பிரிவின் கேடய சாம்பியன் பட்டத்தை கப்பற்படைக் கட்டளை அணியும், அதன் இரண்டாமிடத்தை தெற்கு கடற்படைக் கட்டளை அணியும் பெற்றுக்கொண்டன.
மேலும், இந்த ரக்பி போட்டித் தொடரின் ஆண்கள் பிரிவின் கிண்ண (Bowl) சாம்பியன் பட்டத்தை மேற்கு கடற்படைக் கட்டளை அணியும், பெண்கள் பிரிவின் கிண்ண சாம்பியன் பட்டத்தை கிழக்கு கடற்படைக் கட்டளை அணியும் வென்றெடுத்தன.
அதேபோன்று, இப்போட்டித் தொடரின் சிறந்த ஆண் வீரருக்கான விருதை கப்பற்படைக் கட்டளை அணியின் லெப்டினன்ட் சிபி செனவிரத்னவும், சிறந்த பெண் வீரருக்கான விருதை பயிற்சிக் கட்டளை அணியின் சாதாரண கடற்படை வீராங்கனை ஆர்எம்எஸ்எஸ் ரத்நாயக்கவும் வென்றெடுத்ததுடன், இப்போட்டித் தொடரின் சிறந்த மூத்த வீரருக்கான விருதை கொமாண்டர் அணுராத தேசப்பிரிய பெற்றுக்கொண்டார்.
மேலும், கட்டளைகளுக்கு இடையிலான ரக்பி போட்டித் தொடர் - 2026 இன் முதன்மை விருந்தினராக தலைமை அதிகாரி மற்றும் வடக்கு கடற்படைக் கட்டளையின் தளபதியும் ரக்பி சங்கத்தின் தலைவருமாகிய ரியர் அட்மிரல் புத்திக லியனகமகே கலந்துகொண்டார். இந்நிகழ்வில் ரக்பி சங்கத்தின் செயலாளர் உட்பட சிரேஷ்ட மற்றும் இளநிலை அதிகாரிகள், கடற்படை வீரர்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.













