கட்டளைகளுக்கு இடையிலான துப்பாக்கிச் சூட்டுப் போட்டி வெற்றிகரமாக நிறைவுற்றது
கட்டளைகளுக்கு இடையிலான துப்பாக்கிச் சூட்டுப் போட்டியானது இலங்கை கடற்படை கப்பல் சிக்ஷா நிறுவனத்தின் துப்பாக்கிச் சூட்டுப் தளத்தில் 2026 ஒக்டோபர் 02 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரை நடைபெற்றதுடன், அதில் கைத்துப்பாக்கி (Pistol) மற்றும் ரைபிள் (Rifle) ஆடவர் சாம்பியன்ஷிப்பை மேற்கு கடற்படை கட்டளையும், மகளிர் சாம்பியன்ஷிப்பை தெற்கு கடற்படை கட்டளையும் வென்றெடுத்தன.
அதற்கமைய, இப்போட்டியில் அனைத்துக் கடற்படை கட்டளைகளையும் பிரதிநிதித்துவப்படுத்தி 120 வீர வீராங்கனைகள் பங்கேற்றதுடன், அனைத்து போட்டிகளிலும் கைத்துப்பாக்கி மற்றும் ரைபிள் பிரிவின் ஆடவர் பிரிவில் சிறந்த துப்பாக்கிச் சூட்டாளராக வடமத்திய கடற்படை கட்டளையின் காலாட்படை வீரர் எச்ஆர்எஸ்டி செனவிரத்னவும், மகளிர் பிரிவில் சிறந்த துப்பாக்கிச் சூட்டாளராக தெற்கு கடற்படை கட்டளையின் பெண் கடற்படை வீராங்கனை எச்எம்டிஎன் ஹேரத்தும் கிண்ணங்களை வென்றெடுத்தனர்.
மேலும், போட்டியின் பரிசளிப்பு மற்றும் கிண்ணங்கள் வழங்கும் நிகழ்வில் சிவில் பொறியியல் பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் ரவி குணசிங்க, கடற்படை துப்பாக்கிச் சூட்டுப் பிரிவின் தலைவர் ரியர் அட்மிரல் அசல டி சில்வா உட்பட கடற்படை வீரர்கள் பலர் கலந்துகொண்டனர்.













