‘IPSC Shotgun Nationals 2026’ போட்டியின் போது இலங்கை கடற்படை துப்பாக்கி சுடுவீரர்கள் சிறந்த திறமையை வெளிப்படுத்தினர்
‘IPSC Shotgun Nationals / Scorpion Extreme Shotgun Challenge 2026’ போட்டியானது, 2026 ஜூன் 19 முதல் 21 வரை பானளுவையில் அமைந்துள்ள இலங்கை இராணுவ கைத்துப்பாக்கி சுடும் வளாகத்தில் வெற்றிகரமாக நடைபெற்றதுடன், அதில் இலங்கை கடற்படை நடைமுறை துப்பாக்கி சுடுதல் குழுவினர் சிறந்த திறமையை வெளிப்படுத்தி 12 தங்கப் பதக்கங்கள், 05 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 03 வெண்கலப் பதக்கங்களை வென்றனர்.
‘Scorpion Shooting Club’ துப்பாக்கி சுடுதல் விளையாட்டுக் கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த மூன்று நாள் (03) போட்டியில், இலங்கை இராணுவம், இலங்கை கடற்படை, இலங்கை விமானப்படை மற்றும் இலங்கை பொலிஸ் ஆகியவற்றை பிரதிநிதித்துவப்படுத்தியும், நாட்டின் 10 துப்பாக்கி சுடுதல் விளையாட்டுச் சங்கங்களைச் சேர்ந்த முன்னணி துப்பாக்கி சுடுவீரர்கள் பலர் கலந்துகொண்டனர்.3
அங்கு, தனிநபர் நிகழ்வுகளில் விசேட திறமைகளை வெளிப்படுத்தி; National Range Officer Standard Division இல் தங்கப் பதக்கத்தையும், Standard Lady இல் தங்கப் பதக்கத்தையும் மாஸ்டர் சீப் பெடி ஒபிசர் (ஓய்வுபெற்ற) யுஎஸ் ரொட்ரிகோ அவர்களும், Standard Overall Division இல் தங்கப் பதக்கத்தை லீடிங் சீமன் டப்ளியூஏடி சதுரங்க, அதே பிரிவில் வெள்ளிப் பதக்கத்தை லீடிங் சீமன் ஆர்எல்ஜி மதுசங்க, வெண்கலப் பதக்கத்தை கமாண்டர் எச்ஏடி பொன்சேகா அவர்களும், Standard Manual Lady Division இல் வெண்கலப் பதக்கத்தை வுமன் ஏபல் சீமன் எச்எம்எம் ரணசிங்கவும், Standard Manual Overall Division இல் தங்கப் பதக்க்த்தை தலைமை ரேடியோ தொழில்நுட்பவியலாளர் கேபிஜிடி தனுஷ்க, அதே பிரிவில் வெண்கலப் பதக்கத்தை பெடி ஒபிசர் பிஎம்பிஎல் தயானந்த அவர்களும் வென்றெடுத்தனர்.
மேலும், குழு நிகழ்வுகளில்; Standard Division Team Overall பிரிவில் தங்கப் பதக்கத்தை கமாண்டர் எச்ஏடி பொன்சேகா, லீடிங் சீமன் டப்ளியூஏகேடிசி பெரேரா, லீடிங் சீமன் டப்ளியூஏடி சதுரங்க மற்றும் லீடிங் சீமன் ஆர்எல்ஜி மதுசங்க ஆகியோர் வென்றதுடன், அதன் வெள்ளிப் பதக்கத்தை மாஸ்டர் சீப் பெடி ஒபிசர் (ஓய்வுபெற்ற) யுஎஸ் ரொட்ரிகோ, லீடிங் சீமன் (பெண்) சிஎன் ஜயசிங்க, எழுத்தர் (பெண்) ஜேடிஎம்எஸ் மில்ரோய் மற்றும் வுமன் ஏபல் சீமன் கேபிசி துலக்ஷிகா ஆகியோர் வென்றெடுத்தனர்.
மேலும், Standard Manual Division Team Overall பிரிவில் தங்கப் பதக்கத்தை பெடி ஓபிசர் பிடப்ளியூஏடி பிரதீப், பெடி ஒபிசர் இகேசியு குமார, பெடி ஒபிசர் பிஎம்பிஎல் தயானந்த மற்றும் தலைமை ரேடியோ தொழில்நுட்பவியலாளர் கேபிஜிடி தனுஷ்க ஆகியோர் வென்றெடுத்தனர்.
இலங்கை கடற்படை துப்பாக்கி சுடுதல் பயிற்சியாளர் திருமதி யுஎஸ் ரொட்ரிகோ அவர்களின் சிறந்த பயிற்சி, அர்ப்பணிப்பு, தொழில்சார் திறன் மற்றும் வழிகாட்டல் ஆகியவை கடற்படை துப்பாக்கி சுடுவீரர்கள் பெற்ற இந்த போட்டி வெற்றியில் பிரதிபலிக்கின்றன.
போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பதக்கங்கள் மற்றும் கிண்ணங்கள் வழங்கும் நிகழ்வு 2026 செப்டம்பர் 04 ஆம் திகதி இலங்கை முப்படை ஓய்வுபெற்றோர் சங்கத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றதுடன், இந்நிகழ்வில் முப்படை மற்றும் பொலிஸின் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.













