SPORT NEWS › 2026

கட்டளைகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டித் தொடரில் - 2026 இன் சாம்பியன்ஷிப் பட்டத்தை வடமத்திய கடற்படை கட்டளை 'ஏ' அணி வென்றது

21 Sep 2026

கடற்படை கட்டளைகளுக்கு இடையிலான மென்பந்து கிரிக்கெட் தொடர் - 2026 இன் இறுதிப் போட்டி 2026 செப்டம்பர் 20 ஆம் திகதி வெலிசறை கடற்படை கிரிக்கெட் மைதானத்தில் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ தலைமையில் நடைபெற்றதுடன், இப்போட்டித் தொடரின் சாம்பியன்ஷிப் பட்டத்தை வடமத்திய கடற்படை கட்டளை 'ஏ' அணி வென்றெடுத்தது.

அதன்படி, அனைத்துக் கடற்படை கட்டளைகளையும் பிரதிநிதித்துவப்படுத்தி பங்கேற்ற அணிகளுக்கு மத்தியில் இறுதிப் போட்டிக்கு வடமத்திய கடற்படை கட்டளை 'ஏ' அணியும் கிழக்கு கடற்படை தளபத்திய 'பி' அணியும் தகுதி பெற்றன. அதில் கிழக்கு கடற்படை கட்டளை 'பி' அணியைத் தோற்கடித்து, கட்டளைகளுக்கு இடையிலான மென்பந்து கிரிக்கெட் தொடர் - 2026 இன் சாம்பியன்ஷிப் பட்டத்தை வடமத்திய கடற்படை கட்டளை 'ஏ' அணி வென்றெடுத்தது.

இப்போட்டித் தொடரில் சிறப்பான திறமைகளை வெளிப்படுத்தி, தொடரின் சிறந்த பந்துவீச்சாளராக கிழக்கு கடற்படை கட்டளை 'பி' அணியைப் பிரதிநிதித்துவப்படுத்திய கடற்படை வீரரான பொறியியல் தொழில்நுட்பவியலாளர் டி.எம்.எஸ். தில்ஹால் அவர்களும், தொடரின் சிறந்த துடுப்பாட்டக்காரராக கிழக்கு கடற்படை தளபத்திய 'பி' அணியைப் பிரதிநிதித்துவப்படுத்திய சிறு அதிகாரி ஜி.டபிள்யூ.ஏ. விஜேரத்ன அவர்களும், இறுதிப் போட்டியின் ஆட்டநாயகனாக வடமத்திய கடற்படை கட்டளை 'ஏ' அணியைப் பிரதிநிதித்துவப்படுத்திய சிறு அதிகாரி டபிள்யூ.டி. ரொஷான் அவர்களும், தொடரின் சிறந்த வீரராக வடமத்திய கடற்படை கட்டளை 'ஏ' அணியைப் பிரதிநிதித்துவப்படுத்திய லெப்டினன்ட் கமாண்டர் கே.எல்.எல். காவிந்த அவர்களும் இதன்போது பதக்கங்கள், கிண்ணங்கள் மற்றும் சான்றிதழ்களைப் பெற்றுக்கொண்டனர்.

மேலும், இறுதிப் போட்டி மற்றும் பரிசளிப்பு விழாவில் கடற்படை தலைமைப் பணியாளர் ரியர் அட்மிரல் ரவீந்திர திசேரா, மேற்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் ஹர்ஷ டி சில்வா, கடற்படை கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் கொமடோர் சமிந்த ரணவீர மற்றும் இலங்கை தேசிய கிரிக்கெட் அணியைப் பிரதிநிதித்துவப்படுத்திய உபுல் தரங்க, அஜந்த மென்டிஸ், தரங்க பரணவிதான, சாமர கப்புகெதர மற்றும் அவிஷ்க பெர்னாண்டோ ஆகிய சிரேஷ்ட கிரிக்கெட் வீரர்களும், சிரேஷ்ட மற்றும் கடற்படை கட்டளைகளை முன்மாதிரிப்படுத்தும் முகமாக கனிஷ்ட அதிகாரிகளும், கடற்படை வீரர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

Accessibility Tools