SPORT NEWS › 2026

கட்டளைகளுக்கு இடையிலான Triathlon போட்டி - 2026 கிழக்கு கடற்படை கட்டளையில் வெற்றிகரமாக நிறைவடைந்தது

27 Sep 2026

2026 செப்டம்பர் 26 ஆம் திகதி கிழக்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் ஹரித ஜயதேவ அவர்களின் தலைமையில், கடற்படை கப்பல்துறை மற்றும் செண்டிபே கடற்கரை சார்ந்த பகுதிகளில் நடைபெற்ற இடைப் கட்டளை முப்பரிமாணப் போட்டியில் ஆண்களுக்கான மற்றும் பெண்களுக்கான சாம்பியன்ஷிப் பட்டங்களை பயிற்சி கட்டளை வென்றெடுத்தது.

ஆண்களுக்கான மற்றும் பெண்களுக்கான பிரிவுகளாக நடைபெற்ற இப்போட்டியில், அனைத்துக் கடற்படை கட்டளைகளையும் பிரதிநிதித்துவப்படுத்தி 89 வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றனர். அதில், ஆண்களுக்கான தனிநபர் பிரிவில் முதலிடத்தைப் பயிற்சி கடற்படை கட்டளையைப் பிரதிநிதித்துவப்படுத்திய கடற்படை வீரன் (சுழியோடி) எஸ்.பி.கே.என். மதுரங்க கைப்பற்றினார். இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களைப் பயிற்சி கட்டளையைப் பிரதிநிதித்துவப்படுத்திய கடற்படை வீரன் (சுழியோடி) பி.ஆர்.எஸ்.ஐ. பண்டார மற்றும் கடற்படை வீரன் (சுழியோடி) டபிள்யூ.எம்.எஸ்.எல். விஜேசிங்க ஆகியோர் பெற்றுக்கொண்டதுடன், ஆண்களுக்கான ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தைப் பயிற்சி கடற்படை கட்டளை வென்றெடுத்தது.

மேலும், 40 வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கான பிரிவில் முதலிடத்தைப் பயிற்சி கடற்படை கட்டளையைப் பிரதிநிதித்துவப்படுத்திய கடற்படை வீர்ர் டபிள்யூ.எம்.ஐ.கே. விஜேசுந்தர வென்றெடுத்ததுடன், மேலும், பெண்களுக்கான தனிநபர் பிரிவில் முறையே முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களைப் பயிற்சி கட்டளையைப் பிரதிநிதித்துவப்படுத்திய கடற்படை உடற்பயிற்சியாளர் (பெண்) ஈ.எம்.ஏ.ஜி.எல்.பி. எதிரிசிங்க, உடற்பயிற்சியாளர் (பெண்) டி.எஸ்.எம். நிஸ்ஸங்க மற்றும் புதிய கடற்படை வீராங்கனை பி.எச்.டி.டி. திலகரத்ன ஆகியோர் பெற்றுக்கொண்டதுடன், ஆண்களுக்கான மற்றும் பெண்களுக்கான கட்டளைகளுக்கு இடையிலான Triathlon சாம்பியன்ஷிப் பட்டங்களை இவ்வாறு பயிற்சி கட்டளை வென்றெடுத்தது.

Accessibility Tools