சட்டவிரோத போதை மாத்திரைகள் கொண்ட ஒரு நபர் (01) கடற்படை உதவியுடன் கைது

இலங்கை கடற்படை மற்றும் பொலிஸார் ஒருங்கிணைந்து 2020 ஜூன் 01 ஆம் திகதி திருகோணமலை, பொடுவகட்டு பகுதியில் மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது சட்டவிரோத போதை மாத்திரைகள் கொண்ட ஒரு நபர் கைது செய்யப்பட்டார்.

02 Jun 2020

உள்ளூர் கஞ்சா கொண்ட ஒரு நபர் (01) கடற்படை உதவியுடன் கைது

இலங்கை கடற்படை மற்றும் பொலிஸ் சிறப்பு பணிக்குழு ஒருங்கிணைந்து 2020 ஜூன் 01 ஆம் திகதி அம்பாறை, ஹுலன்னுகே பகுதியில் மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் பொது உள்ளூர் கஞ்சா வைத்திருந்த ஒரு நபர் கைது செய்யப்பட்டார்.

02 Jun 2020

கொவிட் -19 வைரஸ் தொற்று குணமடைந்த 08 கடற்படை வீரர்கள் வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர்- குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 411 ஆக அதிகரிப்பு

கொவிட் -19 வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவந்த 08 கடற்படை வீரர்கள் மீது நடத்தப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனைகளின் பின் குறித்த வைரஸ் அவர்களுடைய உடலில் இல்லை என்பதை உறுதிப்படுத்தப்பட்டதுடன் அவர்கள் 2020 மே 31 ஆம் திகதி வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர்.

01 Jun 2020

பூஸ்ஸ கடற்படைத் தளத்தில் தனிமைப்படுத்தலை முடித்த மேலும் 14 நபர்கள் மையத்தை விட்டு வெளியேறினர்

பூஸ்ஸ கடற்படை தளத்தில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் தங்களது தனிமைப்படுத்தலை வெற்றிகரமாக முடித்த 14 நபர்கள் இன்று (2020 ஜூன் 01) மையத்தை விட்டு புறப்பட்டு சென்றுள்ளனர்.

01 Jun 2020

இந்திய கடற்படைக் கப்பல் "ஐ.என்.எஸ் ஜலாஷ்வா" (INS Jalashwa) கொழும்பு துறைமுகத்திற்கு வருகை

இலங்கையில் தங்கி இருக்கும் 700 இந்திய நாட்டினர் மீன்டும் தாய் நாட்டுக்கு அழைத்துச் செல்ல இந்திய கடற்படைக்கு சொந்தமான "ஐ.என்.எஸ் ஜலாஷ்வா" (INS Jalashwa) கப்பல் இன்று (2020 ஜூன் 1) கொழும்பு துறைமுகத்திற்கு வந்தடைந்துள்ளது. இந்த இராஜதந்திர பணிக்கு இலங்கை கடற்படை உதவி வழங்கியது.

01 Jun 2020

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் ஒரு பெண் கைது செய்ய கடற்படை உதவி

கடற்படை மற்றும் பொலிஸார் இணைந்து 2020 மே 31 ஆம் திகதி சிலாவத்துரை, மரிச்சிகட்டி பகுதியில் மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் ஒரு பெண் கைது செய்யப்பட்டார்.

01 Jun 2020

கடற்கரையைப் பாதுகாக்க கடற்படையின் பங்களிப்பு

தெற்கு கடற்படை கட்டளையை மையமாகக் கொண்டு கடலோர தூய்மைப்படுத்தும் திட்டமொன்று 2020 மே 30 ஆம் திகதி கடற்படையால் செயல்படுத்தப்பட்டன.

01 Jun 2020