நிகழ்வு-செய்தி

வெள்ளப்பெருக்கு ஏற்பட முன்னர் கடற்படையின் விரைவான பதில் மீட்பு மற்றும் நிவாரண பிரிவுகள் ஆயத்தம்

இந்த நாட்களில் பெய்யும் மழையால் ஏற்படுகின்ற எதிர்கால அபாயங்கள் மற்றும் இயற்கை பேரழிவுகளுக்கு முன்னெச்சரிக்கையாக அடையாளம் காணப்பட்ட பகுதிகளுக்கு நிவாரண குழுக்களை அனுப்ப கடற்படை இன்று (2020 மே 16) நடவடிக்கை எடுத்துள்ளது.

16 May 2020

செல்லுபடியாகும் அனுமதிப்பத்திரங்கள் இல்லாமல் சிங்கிறால் பிடித்த இரண்டு (02) நபர்கள் கடற்படையினரால் கைது

இலங்கை கடலோர காவல்படையின் ஒருங்கிணைப்புடன் கடற்படை ஒலுவில் பகுதியில் மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது செல்லுபடியாகும் அனுமதி பத்திரங்கள் இல்லாமல் சிங்கிறால் பிடித்த இரண்டு நபர்கள் (02) கைது செய்ய்ப்பட்டனர்.

16 May 2020

கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்காக இலங்கை கடற்படை சங்கம் ஐந்து இலட்சம் ரூபாவை கடற்படைக்கு நன்கொடையாக வழங்கியது.

நாட்டிற்குள் கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த இலங்கை கடற்படை மேற்கொள்கின்ற நடவடிக்கைகளுக்கு ஆதரவாக இலங்கை கடற்படை சங்கம் ஐந்து இலட்சம் ரூபா பணம் (ரூ.500000.00) 2020 மே 15 ஆம் திகதி கடற்படைக்கு நன்கொடையாக வழங்கியது.

16 May 2020

கோவிட் -19 வைரஸ் தொற்று குணமடைந்த 26 கடற்படை வீரர்கள் வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர்- குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 177 ஆக அதிகரிப்பு

கோவிட் -19 வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவந்த மேலும் 26 கடற்படை வீரர்கள் 2020 மே 15 ஆம் திகதி நடத்திய பி.சி.ஆர் பரிசோதனையின் பின் குறித்த வைரஸ் உடலில் இல்லை என்பதை உறுதிப்படுத்தப்பட்டதுடன் வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர்.

16 May 2020

ஒலுவில் கடற்படை தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் தனிமைப்படுத்தப்பட்ட செயற்பாடுகளை நிறைவு செய்த 19 நபர்கள் தங்களது வீடுகளுக்கு செல்லல்

ஒலுவில் கடற்படை தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் தங்களது தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை வெற்றிகரமாக முடித்த 19 நபர்கள் இன்று (2020 மே 15) மையத்தை விட்டு புறப்பட்டு சென்றனர்.

15 May 2020

வெள்ள அபாயத்தை எதிர்கொள்ள கடனி ஆற்றில் உள்ள உப்புத்தன்மை தடைகளை கடற்படை அகற்றியுள்ளது.

பலத்த மழை பெய்யும்போது ஏற்படக்கூடிய வெள்ளத்தில் இருந்து மக்களைப் பாதுகாக்க, களனி ஆற்றின் குறுக்கே அம்பதலே பகுதியில் அமைக்கப்பட்டிருந்த உப்புத்தன்மை தடையை அகற்ற 2020 மே 13 மற்றும் 14 திகதிகளில் கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது.

15 May 2020

வெற்றிகரமான தனிமைப்படுத்தப்பட்ட செயல்முறைக்குப் பிறகு கடற்படை வீரர்களின் 162 குடும்ப உறுப்பினர்கள் தங்களது வீடுகளுக்கு செல்லல்

தங்களது தனிமைப்படுத்தப்பட்ட செயல்முறையை முடித்த, 35 குடும்பங்களைச் சேர்ந்த கடற்படை வீரர்களின் 162 குடும்ப உறுப்பினர்கள் 2020 மே 14 அன்று தனிமைப்படுத்தப்பட்ட மையங்களை விட்டு வெளியேறினர்.

15 May 2020

கோவிட் -19 வைரஸ் தொற்று குணமடைந்த 30 கடற்படை வீரர்கள் வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர்- குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 151 ஆக அதிகரிப்பு

கோவிட் -19 வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவந்த மேலும் 30 கடற்படை வீரர்கள் 2020 மே 14 ஆம் திகதி நடத்திய பி.சி.ஆர் பரிசோதனையின் பின் குறித்த வைரஸ் உடலில் இல்லை என்பதை உறுதிப்படுத்தப்பட்டதுடன் வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர்.

15 May 2020

150 சிரேஷ்ட கடற்படை வீரர்களுக்கு வட்டி இல்லாத கடன் வழங்கப்பட்டன

இலங்கை கடற்படையின் பணி யாற்றும் 150 சிரேஷ்ட கடற்படை வீரர்களுக்கு ரூபா 500,000,00 மதிப்புள்ள வட்டி இல்லாத கடன் வசதியின் காசோலைகளை வழங்கும் நிகழ்வு குறித்த சிரேஷ்ட கடற்படை வீரர்கள் பணியாற்றும் நிருவனங்கள் மற்றும் கப்பல்கள் மையமாக கொண்டு இடம்பெற்றன. மேலும் ஓய்வு பெறுவதற்கு முன்னர் விடுப்பில் இருக்கும் சிரேஷ்ட கடற்படை வீரர்களுக்கு அவர்கள் வசிக்கும் பகுதிக்கு சென்று இந்த காசோலைகள் ஒப்படைக்கப்பட்டன. 2020 மே 11 ஆம் திகதி முதல் 14 ஆம் திகதி வரை இந்த திட்டம் மேற்கொள்ளப்பட்டது.

14 May 2020

குணமடைந்த கடற்படை வீரர்களுக்கு தங்குமிட வசதிகளை வழங்குவதற்காக ‘Udekki Beach Resort’ விடுமுறை விடுதி கடற்படையிடம் தற்காலிகமாக ஒப்படைக்கப்பட்டது

கடற்படையின் சிறப்பு படகுப் படை பிரிவின் கட்டளை அதிகாரியாக தாய்நாட்டின் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கு தனது வாழ்க்கையை அர்ப்பணித்த லெப்டினன்ட் கமாண்டர் செட்ரிக் மார்ட்டின்ஸ்டீனை நினைவுகூருவதற்காக அவரது சகோதரர் தலைமையில் கற்பிட்டி பகுதியில் உள்ள ‘Udekki Beach Resort’ விடுமுறை விடுதி 2020 மே 13 ஆம் திகதி கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுபடுத்தும் கடற்படை வீரர்களின் நலன்புரி வசதிகளுக்காக கடற்படையிடம் தற்காலிகமாக ஒப்படைக்கப்பட்டது.

14 May 2020