நிகழ்வு-செய்தி

'USS Spruance' என்ற கப்பல் கொழும்பு துறைமுகத்தை விட்டு புறப்பட்டது

அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான 'USS Spruance' என்ற கப்பல், அதன் விநியோக மற்றும் சேவை தேவைகளை பூர்த்தி செய்து, அதன் விநியோக மற்றும் சேவை தேவைகளை பூர்த்தி செய்வதற்காக 2024 நவம்பர் 18 அன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததன் பின்னர், கொழும்பு துறைமுகத்தில் இருந்து இன்று (2024 நவம்பர் 19,) கப்பல் புறப்பட்டுச் சென்றதுடன், கடற்படையின் பாரம்பரிய முறைப்படி பிரியாவிடை வழங்கினர்.

19 Nov 2024

USS Michael Murphy' என்ற கப்பல் கொழும்பு துறைமுகத்தில் இருந்து புறப்பட்டுள்ளது

வழங்கல் மற்றும் சேவை தேவைகளை பூர்த்தி செய்வதற்காக 2024 நவம்பர் 16 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த, அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான ‘USS Michael Murphy’ என்ற போர்க்கப்பல் வழங்கல் மற்றும் சேவையை பூர்த்தி செய்த பின்னர், இன்று (2024 நவம்பர் 17,) கொழும்பு துறைமுகத்தில் இருந்து புறப்பாடு மேற்கொள்ளப்பட்டதுடன், கடற்படையின் மரபுப்படி இலங்கை கடற்படையினர் கப்பலுக்கு பிரியாவிடை வழங்கினர்.

17 Nov 2024

ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படைக்கு சொந்தமான ‘SAMIDARE’ என்ற கப்பல் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது

ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படைக்கு சொந்தமான ‘SAMIDARE’ என்ற கப்பல் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று (2024 நவம்பர் 17) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது, வருகை தந்த கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கு அமைவாக வரவேற்றனர்.

17 Nov 2024

அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான ‘USS Michael Murphy’ என்ற கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது

அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான ‘USS Michael Murphy’ என்ற போர்க்கப்பல் வழங்கல் மற்றும் சேவை தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இன்று (2024 நவம்பர் 16,) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததுடன், வருகை தந்த கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கு அமைவாக வரவேற்றனர்.

16 Nov 2024

இலங்கை தொண்டர் கடற்படையின் பதில் தளபதியாக ரியர் அட்மிரல் சிந்தக குமாரசிங்க பதவியேற்றார்

மேற்கு கடற்படை கட்டளைத் தளபதியாக கடமையாற்றிய, ரியர் அட்மிரல் சிந்தக குமாரசிங்க இலங்கை தொண்டர் கடற்படையின் தளபதியாக இன்று (2024 நவம்பர் 15,) தொண்டர் கடற்படைத் தலைமையகத்தில் பதவியேற்றார்.

15 Nov 2024

ரியர் அட்மிரல் லஷாந்த் என் ஹேவாவிதாரண கடற்படை சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்

இலங்கை கடற்படையில் 34 வருட சேவையை நிறைவு செய்து ரியர் அட்மிரல் லஷாந்த் என் ஹேவாவிதாரண இன்று (2024 நவம்பர் 15,) கடற்படை சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்.

15 Nov 2024

இந்திய கடற்படையின் ‘INS Vela’ நீர்மூழ்கிக் கப்பல் தனது உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு இலங்கை விட்டு புறப்பட்டுள்ளது

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு 2024 நவம்பர் 10 ஆம் திகதி இலங்கைக்கு வந்த இந்திய கடற்படைக்கு சொந்தமான ‘INS Vela’ என்ற நீர்மூழ்கிக் கப்பல் தனது உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு இன்று (2024 நவம்பர் 10) இலங்கையை விட்டு புறப்பட்டுள்ளதுடன், இலங்கை கடற்படையினர் குறித்த நீர்மூழ்கிக் கப்பலுக்கு கொழும்பு துறைமுகத்தில் வைத்து கடற்படையின் பாரம்பரிய முறைப்படி பிரியாவிடை வழங்கினர்.

13 Nov 2024

இலங்கைக்கான பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் கடற்படைத் தளபதியை உத்தியோகபூர்வ சந்திப்பிற்காக சந்தித்தார்

இலங்கைக்கான பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் திரு. Andalib Elias அவர்கள் இன்று (2024 நவம்பர் 12) கடற்படைத் தலைமையகத்தில் உத்தியோகபூர்வ சந்திப்பிற்காக கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவை சந்தித்தார்.

12 Nov 2024

இந்திய கடலோர காவல்படையின் பணிப்பாளர் நாயகம் உத்தியோகபூர்வ சந்திப்புக்காக கடற்படைத் தளபதியை சந்தித்தார்

இந்திய கடலோரக் காவல்படையின் பணிப்பாளர் நாயகம் பரமேஷ் சிவமணி (DG Paramesh Sivamani, PTM, TM) இன்று (2024 நவம்பர் 11) கடற்படைத் தலைமையகத்தில் உத்தியோகபூர்வ சந்திப்பிற்காக கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவை சந்தித்தார்.

11 Nov 2024

அகில இலங்கை வரைபடங்கள் மற்றும் நேரடி காணொளிப் போட்டித்தொடரில் பரிசுகளுக்காக கொழும்பு திட்டம் மற்றும் டயலொக் ஆசியாடா நிருவனம் அனுசரணை வழங்குகிறது

போதைப்பொருள் இல்லாத ஒளிமயமான எதிர்காலத்திற்காக குழந்தைகள் மற்றும் இளம் தலைமுறை வலுவூட்டல் என்ற உன்னதமான கருப்பொருளை மனதில் கொண்டு, நச்சு போதைப்பொருள் மற்றும் ஆபத்தான மருந்துகள் பயன்பாட்டைத் தடுப்பதற்காக நிறுவப்பட்ட பணிக்குழுவின் தலைமையில் பாடசாலைக் குழந்தைகள் மற்றும் இளைஞர் சமுதாயத்தினருக்காக வரைபடங்கள் மற்றும் நேரடி காணொளிப் போட்டித்தொடரொன்று 2024 நவம்பர் மாத்த்தில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. குறித்த போட்டித்தொடரில் வெற்றி பெறும் நபர்களுக்கு வழங்கப்படும் பரிசுகளுக்கு அனுசரணை வழங்கும் கொழும்பு திட்டம் மற்றும் டயலொக் ஆசியாடா நிருவனம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் 2024 நவம்பர் 11 ஆம் திகதி நச்சு போதைப்பொருள் மற்றும் ஆபத்தான மருந்துகள் பயன்பாட்டைத் தடுப்பதற்காக நிறுவப்பட்ட பணிக்குழுவின் தலைவரான வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவை கடற்படை தலைமையகத்தில் சந்தித்து அடையாள ரீதியாக பரிசுகளை கையளித்தனர்.

11 Nov 2024