நடவடிக்கை செய்தி

32 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவுடன் ஒருவர் கடற்படையினரால் கைது

வெத்தலகேணி, கடைகாடு கடற்கரை பகுதியில் 2021 ஜூலை 22 ஆம் திகதி மேற்கொண்டுள்ள சிறப்பு ரோந்து நடவடிக்கையின் போது, 107 கிலோ மற்றும் 840 கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டார்.

23 Jul 2021

41 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது

யாழ்ப்பாணம் தொன்டமனாரு வடக்கு கடற்பரப்பில் 2021 ஜூலை 19 ஆம் திகதி இரவு மேற்கொள்ளப்பட்ட சிறப்பு சோதனை நடவடிக்கையின் போது, கடற்படை நடவடிக்கைகளின் காரணத்தினால் கரைக்கு கொண்டு வர முடியாமல் கடலில் வீசப்பட்ட 139 கிலோ மற்றும் 100 கிராம் கேரள கஞ்சா கடற்படையினரால் கைது செய்யப்பட்டது.

20 Jul 2021

‘610 கடல் மைல் தூரத்தில் பாதிக்கப்பட்ட ஒரு மீனவரை சிகிச்சைக்காக கரைக்கு கொண்டு வர கடற்படையின் உதவி

இலங்கையின் தென்கிழக்கில் உள்ள பெரிய இராவண கலங்கரை விளக்கத்திலிருந்து (Great Basses) சுமார் 610 கடல் மைல் (சுமார் 1129 கி.மீ) தூரத்தில் நடைபெற்ற விபத்தொன்றால் காயமடைந்த இலங்கை பல நாள் மீன்பிடி படகொன்றில் மீனவரை சிகிச்சைக்காக இலங்கை கடற்படை கப்பல் சயுரல மூலம் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு கொண்டு வந்து உடனடி சிகிச்சைக்காக ஹம்பாந்தோட்டை வைத்தியசாலைக்கு அனுப்ப கடற்படை இன்று (2021 ஜுலை 18) நடவடிக்கை எடுத்துள்ளது.

18 Jul 2021

31 மில்லியன் ரூபா பெறுமதியான கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை கடற்பரப்பில் 2021 ஜூலை 15 ஆம் திகதி இரவு நடத்தப்பட்ட சிறப்பு ரோந்துப் நடவடிக்கைகளின் போது, 103 கிலோ மற்றும் 750 கிராம் கேரள கஞ்சாவுடன் 03 சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். மேலும் கடத்தல் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்ட படகு ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

16 Jul 2021

ரூ .52 மில்லியனுக்கும் மேல் பெறுமதியான மற்றொரு கேரள கஞ்சா பொதி கடற்படையினரால் வட கடலில் பறிமுதல் செய்யப்பட்டது

யாழ்ப்பாணம், தொண்டமனாரு கடல் பகுதியில் 2021 ஜூன் 20 ஆம் திகதி இரவு நடத்தப்பட்ட சிறப்பு ரோந்துப் நடவடிக்கைகளின் போது, 174 கிலோ மற்றும் 50 கிராம் கேரள கஞ்சா மற்றும் 05 கிலோ கிராம் உலர் மஞ்சளுடன் ஒரு டிங்கி படகு மற்றும் 02 சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

21 Jun 2021

சிலாபம் கடலில் இருந்து கேரள கஞ்சாவின் மற்றொரு பங்கை கடற்படை கைப்பற்றியது

இலங்கை கடற்படை சிலாபம், முக்கு தொடுவாவ கடற்கரையில் இன்று (2021 ஜூன் 20) நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, கடலில் மிதந்த 23 கிலோவிற்கு மேற்பட்ட கேரள கஞ்சாவை கண்டுபிடித்தனர்.

20 Jun 2021

சீரற்ற வானிலை காரணத்தினால் மிதந்து வந்த 03 இந்திய மீன்பிடிப் படகுகள் கடற்படையால் மீட்பு

கடந்த தினங்களில் நிலவிய பலத்த காற்று காரணத்தினால் இலங்கை கடல் பகுதிக்கு மிதந்து வந்த 03 இந்திய மீன்பிடிப் படகுகள் வடமேற்கு கடற்கரையில் மற்றும் தெற்கு கடற்கரையில் வைத்து 2021 ஜூன் 17 ஆம் திகதி கடற்படையினரால் கண்டுபிடிக்கப்பட்டன.

18 Jun 2021

MV X-PRESS PEARL கப்பலின் தீயால் பாதிக்கப்பட்ட கடற்கரையை தூய்மைப்படுத்தும் செயல்பாடு

MV X-PRESS PEARL கப்பலின் தீ விபத்தால் பாதிக்கப்பட்ட கடலோரப் பகுதிகளில் இருந்து குப்பைகளை அகற்ற 2021 மே 26 அன்று கடற்படை மற்ற பங்குதாரர்களுடன் தொடங்கிய கடற்கரை சுத்தம் செய்யும் திட்டங்கள் மேலும் தொடர்கிறது.

18 Jun 2021

சுமார் ரூ .39 மில்லியன் பெறுமதியான கேரள கஞ்சாவுடன் 02 சந்தேகநபர்கள் கடற்படையினரால் கைது

ஊர்காவற்துறை, கரம்பன் கடற்கரை பகுதியில் மேற்கொண்டுள்ள சிறப்பு ரோந்துப் நடவடிக்கையின் போது, சுமார் 130 கிலோ 760 கிராம் கேரள கஞ்சாவுடன் ஒரு டிங்கி படகு மற்றும் இரண்டு (02) சந்தேக நபர்கள் 2021 ஜூன் 17 அன்று கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

18 Jun 2021

சட்டவிரோதமான முறையில் கடத்தப்பட்ட உலர்ந்த மஞ்சள் மற்றும் பீடி இலைகள் கடற்படையினரால் பறிமுதல்

மன்னார், கொந்தபிட்டி மற்றும் சிலாவத்துர, அரிப்பு கடலோரப் பகுதிகளில் இன்று (2021 ஜூன் 16) காலை நடத்தப்பட்ட சிறப்பு ரோந்துப் நடவடிக்கைகளின் போது, சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கடத்த முயன்ற சுமார் 370 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சளுடன் இரண்டு (02) சந்தேக நபர்கள் மற்றும் 294 கிலோகிராம் பீடி இலைகள் (Kendu Leaves) கடற்படையினரால் கைது செய்யப்பட்டது.

16 Jun 2021