வெற்றிகரமான சுற்றுப்பயணத்திற்குப் பின் ஜப்பானிய சுய பாதுகாப்பு கடற்படை பிரிவின் ‘டிடி- 102 ஹருசாமே’ கப்பல் தாயகம் திரும்பியது

2019 டிசம்பர் 10, அன்று இலங்கை வந்து சேர்ந்த ஜப்பானிய சுய பாதுகாப்பு கடற்படை பிரிவின் ‘டிடி- 102 ஹருசாமே’ கப்பல் இன்று (2019 டிசம்பர் 12) திருகோணமலை துறைமுகத்திலிருந்து புறப்பட்டுள்ளது.

12 Dec 2019

சட்டவிரோதமாக இரவில் கடல் அட்டைகள் பிடித்த 04 நபர்கள் கடற்படையால் கைது

மன்னார், பல்லெமுனே கடற்கரை பகுதியில் இன்று (2019 டிசம்பர் 12) நடத்தப்பட்ட ரோந்து நடவடிக்கையின் போது சட்டவிரோதமாக இரவில் கடல் அட்டைகள் பிடித்த 04 நபர்கள் கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.

12 Dec 2019

ரியர் அட்மிரல் சுஜீவ பெரேரா கடற்படை சேவையில் இருந்து ஓய்வுபெற்றார்

இலங்கை தன்னார்வ கடற்படையின் முன்னாள் தளபதி,ரியர் அட்மிரல் சுஜீவ பெரேரா இன்றுடன் (2019 டிசம்பர் 11) தமது 35 வருட கடற்படை சேவைக்கு பிரியாவிடையளித்து ஓய்வு பெற்றார்.

12 Dec 2019

கிரிகோரி ஏரியில் விபத்தான 'ஜெட் ஸ்கி' படகில் இருந்த இருவர் கடற்படையால் மீட்பு

நுவரலியா கிரகோரி ஏரியில் 'ஜெட் ஸ்கி’ நீர் விளையாட்டில் ஈடுபட்டுருக்கும் போது விபத்தான இருவர் 2019 டிசம்பர் 10 ஆம் திகதி கடற்படையினரினால் மீட்கப்பட்டுள்ளது.

11 Dec 2019

சீனத் தூதரகம் கடற்படையின் "நீல பசுமைப் போருக்கு" சைக்கிள் மற்றும் மின்சார மோட்டார் வாகனங்கள் நன்கொடையாக அளிக்கிறது

இலங்கையில் உள்ள சீன மக்கள் குடியரசின் தூதரகம், கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா உருவாக்கிய 'நீல பசுமைப் போரை' வலுப்படுத்த 2019 டிசம்பர் 10 ஆம் திகதி கடற்படைத் தலைமையகத்தில் சைக்கிள் மற்றும் மின்சாரத்தால் இயங்கும் வாகனங்களை கடற்படைக்கு வழங்கியது.

11 Dec 2019

வடமேற்கு கடற்படை கட்டளையின் புதிய பல் மருத்துவமனை கட்டிடம் திறப்பு விழா

வடமேற்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் தம்பப்பன்னி நிறுவனத்தில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட பல் மருத்துவமனை 2019 டிசம்பர் 10, அன்று வடமேற்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் ருவன் பெரேராவுடைய தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.

11 Dec 2019

சிரேஷ்ட கடற்படை வீர்ர்கள் 100 பேருக்கு வட்டியற்ற கடன் வழங்கப்பட்டது

இலங்கை கடற்படையின் நூறு (100) சிரேஷ்ட வீர்ர்களுக்கு ரூபாய் (ரூ .500,000 / =) வட்டி இல்லாத கடன் வசதி கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவினால் கடற்படைத் தலைமையகத்தில் 10 ஆம் திகதி டிசம்பர் 2019 அன்று வழங்கப்பட்டது.

11 Dec 2019

இலங்கை கடற்படை கப்பல் சமுதுரவின் புதிய கட்டளை அதிகாரியாக கேப்டன் பிரபாத் ரதுகமகே கடமையேற்பு

இலங்கை கடற்படையின் ஆழ் கடல் ரோந்து கப்பலான சமுதுரவின் புதிய கட்டளை அதிகாரியாக கேப்டன் பிரபாத் ரதுகமகே (சமிக்ஞைகளை) 2019 டிசம்பர் 10 ஆம் திகதி தன்னுடைய பதவியில் கடமையேற்றினார்.

11 Dec 2019

இலங்கை கடற்படையின் ‘சுரநிமில’ மற்றும் ‘நன்திமித்ர’ கப்பல்கள் அதன் 19 வது ஆண்டு நிறைவை கொண்டாடுகிறது

இலங்கை கடற்படையின் விரைவு தாக்குதல் ஏவுகணை கப்பல்கலான இலங்கை கடற்படை கப்பல் சுரநிமில மற்றும் நன்திமித்ர ஆகிய கப்பல்கள் 2019 டிசம்பர் 09 ஆம் திகதி தங்களுடைய 19 வது ஆண்டு நிறைவை கொண்டாடியது.

10 Dec 2019

ஜப்பானிய சுய பாதுகாப்பு கடற்படை பிரிவின் ‘டிடி- 102 ஹருசாமே’ கப்பல் திருகோணமலைக்கு வருகை

ஜப்பானிய சுய பாதுகாப்பு கடற்படை பிரிவின் " டிடி- 102 ஹருசாமே" எனும் கடற்படை கப்பல் நல்லெண்ண விஜயமொன்றினை மேற்கொண்டு இன்று (2019 டிசம்பர் 10) திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. அங்கு ஜப்பானிய கடற்படை கப்பலை கடற்படை மரபுகளுக்கமைய இலங்கை கடற்படையினர் வரவேற்றனர்.

10 Dec 2019