நிகழ்வு-செய்தி

கடற்படையின் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களை விட்டு மேலும் 15 நபர்கள் வெளியேறினர்

பூஸ்ஸ கடற்படை முகாமில் மற்றும் கற்பிட்டி பகுதியில் உள்ள கடற்படை தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் தங்களது தனிமைப்படுத்தலை முடித்த மேலும் 15 நபர்கள் இன்று (2020 ஆகஸ்ட் 07) குறித்த மையங்களை விட்டு வெளியேறினர்.

07 Aug 2020

கேப்டன் புத்திக ரூபசிங்க இலங்கை கடற்படைக் கப்பல் சயுரவின் கட்டளை அதிகாரியாக பொறுப்பேற்றுள்ளார்

இலங்கை கடற்படையின் ஆழ்கடல் கண்கானிப்பு கப்பலான சயுரவின் புதிய கட்டளை அதிகாரியாக (2020 ஆகஸ்ட் 06) அன்று கேப்டன் புத்திக ரூபசிங்க கடமைகளை ஏற்றுக்கொண்டார்.

06 Aug 2020

4 வது துரித தாக்குதல் படைப்பிரிவுக்கு ஒரு மிதக்கும் பேரழிவு மேலாண்மை பயிற்சி பிரிவு

செயல்பாட்டு சேவையிலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த முன்னாள் பி 419 துரித தாக்குதல் ரோந்து படகு திருகோணமலை கடற்படை கப்பல்துறை வளாகத்தில் மிதக்கும் பேரழிவு மேலாண்மை பிரிவாக மாற்றிய பின்னர் கிழக்கு கடற்படை கட்டளையின் கட்டளை அதிகாரி 2020 ஆகஸ்ட் 05 ஆம் திகதி 4 வது துரித தாக்குதல் படைப்பிரிவின் பயிற்சி பிரிவுக்கு சடங்கு முறையில் ஒப்படைத்தார்.

06 Aug 2020

கின் நதி பகுதியில் வெள்ள அச்சுறுத்தலைத் தவிர்க்க கடற்படையின் பங்களிப்பு

கடந்த தினங்களில் தொடர்ந்து பெய்த மழை காரணத்தினால், காலி வக்வெல்ல மற்றும் தொடங்கொடை பாலங்களில் சிக்கிக்கிடந்த குப்பைகள் மற்றும் மரத்துண்டுகள் கடற்படையினரால் அகற்றப்பட்டன. குறித்த நடவடிக்கை மூலம் இப்பகுதியில் தாழ்வான பகுதிகளை வெள்ள அபாயத்திலிருந்து மீட்க கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது.

06 Aug 2020

இலங்கை கடற்படையின் அபீத II, ரணவிக்கிரம மற்றும் ரணவிஜய கப்பல்களுக்கான புதிய கட்டளை அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.

கொமாண்டர் சமில ராஜபக்ஷ, கொமாண்டர் சாந்த அம்பன்வல மற்றும் லெப்டினன்ட் கொமாண்டர் இந்துவர தர்மரத்ன ஆகியோர் முறையே இலங்கை கடற்படை கப்பல் அபீத II, ரணவிக்ரம மற்றும் ரணவிஜய ஆகிய கப்பல்களின் கட்டளை அதிகாரிகளாக 2020 ஆகஸ்ட் 04 அன்று நியமிக்கப்பட்டனர்.

05 Aug 2020

கடற்படையின் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களை விட்டு மேலும் 09 நபர்கள் வெளியேறினர்

பூஸ்ஸ கடற்படை முகாமில் மற்றும் கற்பிட்டி பகுதியில் உள்ள கடற்படை தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் தங்களது தனிமைப்படுத்தலை முடித்த மேலும் 09 நபர்கள் 2020 ஆகஸ்ட் 02,03 மற்றும் 04 ஆம் திகதிகளில் மையங்களை விட்டு வெளியேறினர்.

04 Aug 2020

ரியர் அட்மிரல் கஸ்ஸப போல் கடற்படை சேவையிலிருந்து விடைபெற்றார்

ரியர் அட்மிரல் கஸ்ஸப போல் 2020 ஆகஸ்ட் 03 ஆம் திகதி 34 ஆண்டுகளுக்கும் மேலாக தனது புகழ்பெற்ற கடற்படை சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்.

04 Aug 2020

கொமடோர் பிரியந்த பெரேரா தெற்கு கடற்படை கட்டளைத் தளபதியாக பொறுப்பேற்றுள்ளார்

கமடோர் பிரியந்த பெரேரா தெற்கு கடற்படை கட்டளைத் தளபதியாக 2020 ஜூலை 31 அன்று தெற்கு கடற்படை கட்டளை தலைமையகத்தில் கடமைகளை ஏற்றுக்கொண்டார்.

02 Aug 2020

கொமாண்டர் அசங்க மனுரத்ன இலங்கை கடற்படைக் கப்பல் ரத்னதீபவின் கட்டளை அதிகாரியாக பொறுப்பேற்றுள்ளார்

இலங்கை கடற்படையின் கடலோர ரோந்து கப்பலான இலங்கை கடற்படை கப்பல் இரத்னதீபவின் புதிய கட்டளை அதிகாரியாக 2020 ஜூலை 31 அன்று கொமாண்டர் அசங்க மனுரத்ன கடமைகளை ஏற்றுக்கொண்டார்.

02 Aug 2020

இலங்கைக்கான ஆஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் புதிய கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு

இலங்கைக்கான ஆஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் டேவிட் ஹோலி அவர்கள் 2020 ஜூலை 31 வெள்ளிக்கிழமை கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவை சந்தித்தார்.

01 Aug 2020