வெற்றிகரமான விஜயத்தின் பின் இந்திய கடற்படைக் கப்பல் “அய்ராவத்” தாயாகம் திரும்பின

2020 ஜனவரி 20 ஆம் திகதி இலங்கை வந்தடைந்துள்ள இந்திய கடற்படையின் அய்ராவத் கப்பல் இன்று (2020 ஜனவரி 22) வெற்றிகரமான தனது விஜயத்தின் பின் புறப்பட்டு சென்றுள்ளது. அங்கு இலங்கை கடற்படையினரினால் நாட்டை விட்டு புறப்பட்ட இக்கப்பலுக்கு கடற்படை மரபுக்களுக்கமைய பிரியாவிடையளிக்கப்பட்டன.

22 Jan 2020

கடற்படை மற்றும் போலீஸ் கூட்டு நடவடிக்கையால் ஹெராயினுடன் ஒருவர் கைது

கடற்படை மற்றும் மன்னார் மாவட்ட ஊழல் தடுப்புப் பிரிவு ஒருங்கிணைந்து 2020 ஜனவரி 21 ஆம் திகதி தலைமன்னார், எருக்குலம்பிட்டி பகுதியில் நடத்திய கூட்டு நடவடிக்கையின் போது ஹெராயின் கொண்ட ஒருவர் கைது செய்யப்பட்டார்.

22 Jan 2020

பல்கலைக்கழக மாணவர்களின் பவளப்பாறை நடவு மற்றும் பாதுகாப்பு திட்டத்திற்கு கடற்படை ஆதரவு

ருஹுன பல்கலைக்கழக மாணவர்கள் குழுவொன்று 2020 ஜனவரி 18 ஆம் திகதி கடற்படையுடன் இணைந்து ஒரு பவள நடவு மற்றும் பாதுகாப்பு திட்டத்தைத் தொடங்க ஒரு அடிப்படை பயிற்சித் திட்டத்தை மேற்கொண்டது.

22 Jan 2020

பேருந்தில் கேரள கஞ்சாவை கொண்டு சென்ற மூன்று பேர் கைதுசெய்ய கடற்படை ஆதரவு

2020 ஜனவரி 22 ஆம் திகதி சுமார் 176 கிலோ கிராம் கேரள கஞ்சாவை பேருந்தில் கடத்தி வந்த 03 சந்தேக நபர்களை புத்தலம், பாலவிய பகுதியில் வைத்து போதைப்பொருள் தடுப்பு பணியகத்தின் உதவியுடன் கடற்படையால் கைது செய்யப்பட்டது.

22 Jan 2020

இலங்கை கடற்படை, இலங்கை விமானப்படை மற்றும் ஜப்பானிய கடல்சார் தற்காப்பு படை இனைந்து நீர்கொழும்பு கடல் பகுதியில் கூட்டு பயிற்சி

இலங்கை கடற்படை, இலங்கை விமானப்படை மற்றும் ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படையின் இரண்டு விமானங்கள் இனைந்து ஆழ்கடலில் உள்ள கப்பலில் பேரழிவு ஏற்பட்டால், அவசரகால வெளியேற்றத்திலிருந்து தப்பியவர்களைக் கண்டுபிடிப்பதற்காக ஒரு தேடல் மற்றும் மீட்பு பயிற்சியை நடத்தியது.

22 Jan 2020

திருகோணமலை துறைமுகத்திற்கு அருகே தடைசெய்யப்பட்ட கடல் பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்ட 02 நபர்கள் கடற்படையால் கைது

திருகோணமலை துறைமுகத்திற்கு அருகே தடைசெய்யப்பட்ட கடல் பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்ட 02 நபர்கள் மற்றும் அவர்களின் மீன்பிடி பொருட்கள் கடற்படையால் 2020 ஜனவரி 21 ஆம் திகதி கைது செய்யப்பட்டது.

22 Jan 2020

இந்திய கடற்படை கப்பல் “அய்ராவத்” வின் கடற்படை உறுப்பினர்களுக்காக பேரழிவு மேலாண்மை மற்றும் விரைவான பதில் பயிற்சி திட்டமொன்று நடைபெற்றது.

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜய மொன்று வந்துள்ள இந்திய கடற்படை கப்பல் “அய்ராவத்” வின் கடற்படை உறுப்பினர்களுக்காக 2020 ஜனவரி 21 ஆம் திகதி கங்கேவாடிய விரைவான அதிரடி படகுப் படைத் தலைமையகத்தில் மனிதாபிமான உதவி மற்றும் பேரழிவு நிவாரணம் குறித்த பயிற்சித் திட்டமொன்று நடத்தப்பட்டது.

22 Jan 2020

ஏராவூர் களப்பு பகுதியில் இருந்து தடைசெய்யப்பட்ட 02 வலைகள் கடற்படையால் கண்டுபிடிக்கப்பட்டன

கடற்படையினரினால் 2020 ஜனவரி 20 ஆம் திகதி ஏராவூர் களப்பு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது தடைசெய்யப்பட்ட 02 வலைகள் கண்டுபிடிக்கப்பட்டன.

21 Jan 2020

கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்ய கடற்படை ஆதரவு

கடற்படை மற்றும் பொலிஸார் கூட்டாக இனைந்து 2020 ஜனவரி 20 ஆம் திகதி சாவக்கச்சேரி, நாவட்குளி பகுதியில் நடந்திய சோதனை நடவடிக்கையின் போது கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

21 Jan 2020

மர ஆலையில் ஏற்பட்ட தீ அனர்த்தம் கட்டுப்படுத்த கடற்படை உதவி

ராகம, ஹீந்கெந்த சாலையில் உள்ள ஒரு மர ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தினை கட்டுப்டுத்த இன்று (2020 ஜனவரி 21) கடற்படையினர் நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளனர்.

21 Jan 2020