வடக்கு மற்றும் தெற்கு கடற்கரைகள் கடற்படையின் பங்களிப்பால் சுத்தம் செய்யப்பட்டன
கொழும்பு கோட்டை பிரதான பேருந்து நிலையம் மையப்படுத்தி கடற்படையால் கிருமி நீக்கும் திட்டமொன்று செயல்படுத்தப்பட்டன
படைவீரர்களின் குடும்ப உறுப்பினர்களுக்காக ரணவீரு சேவா அதிகார சபையால் ஏற்பாடு செய்த நடமாடும் சேவை வெற்றிகரமாக நிறைவடைந்தது

முப்படைகள்,பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தில் சேவையில் ஈடுபட்ட சமயம் உயிர்நீர்த்த, அங்கவீனமுற்ற மற்றும் ஓய்வுபெற்ற படைவீரர்களின் குடும்ப உறுப்பினர்களின் நலன்புரி நடவடிக்கைகளை கருத்திக்கொண்டு ரணவிரு சேவை அதிகார சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நடமாடும் சேவை 2020 ஒக்டோபர் மாதம் 03 திகதி காலை 0800 மணி முதல் மாலை 0500 மணி வரை பாதுகாப்பு செயளாலர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன அவர்களின் தலைமையில் சாலியபுர கஜபா ரெஜிமன்ட் தலைமையகத்தில் நடைபெற்றது.
05 Oct 2020
சர்வதேச சிறுவர் தினம் மற்றும் லேடி றிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் 125 வது ஆண்டு நிறைவுக்கு இனையாக கெளரவ பிரதமர் தலைமையில் இடம்பெற்ற விழாவில் கடற்படைத் தளபதி பங்கேற்பு
செனெஹச கல்வி வள ஆராய்ச்சி மற்றும் தகவல் மையத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட சர்வதேச சிறுவர் தின கொண்டாட்டங்களில் கடற்படைத் தளபதி பங்கேப்பு

உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு சிறப்புத் தேவைகளைக் கொண்ட குழந்தைகளின் திறமைகளை வெளிப்படுத்த செனெஹச கல்வி வள ஆராய்ச்சி மற்றும் தகவல் மையம் ஏற்பாடு செய்த வருடாந்த நிகழ்வு இன்று (2020 அக்டோபர் 01) அதி மேதகு முதல் பெண்மணி திருமதி அயோமா ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்த சிறப்பு நிகழ்ச்சியில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன மற்றும் கடற்படை சேவா வனிதா பிரிவுத் தளபதி திருமதி சந்திமா உலுகேதென்ன ஆகியோரும் கலந்து கொண்டனர்.
01 Oct 2020
போர்வீரர்களுடைய குடும்ப உறுப்பினர்களின் நலனுக்காக ரணவிரு சேவா அதிகாரசபையால் நடமாடும் சேவை

முப்படை, காவல்துறை மற்றும் சிவில் பாதுகாப்புத் துறையில் பணியாற்றி உயிர் இழந்த, ஊனமுற்ற மற்றும் ஓய்வு பெற்ற வீரர்களுடைய குடும்ப உருப்பினர்களின் நலனுக்காக நடமாடும் சேவையொன்று கெளரவ பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன, முப்படை தளபதிகள் மற்றும் செயல் பொலிஸ் மா அதிபர் தலைமையில் 2020 அக்டோபர் 03 ஆம் திகதி 0800 மணி முதல் 1700 மணி வரை அனுராதபுரம் சாலியபுர கஜபா ரெஜிமென்ட் தலைமையகத்தில் நடத்த ரணவிரு சேவா அதிகாரசபையால் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
01 Oct 2020