நிகழ்வு-செய்தி

ரியர் அட்மிரல் குமார சேனாதீர கடற்படை சேவையிலிருந்து விடைபெற்றார்

ரியர் அட்மிரல் குமார சேனாதீர இன்று (2020 செப்டம்பர் 07) 28 ஆண்டுகளுக்கும் மேலான தனது புகழ்பெற்ற கடற்படை சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்.

02 Sep 2020

யாழ்ப்பாண தீபகற்பத்தில் பாடசாலை மாணவர்களுக்காக கடல் சுற்று பயணமொன்று கடற்படை ஏற்பாடு செய்துள்ளது

யாழ்ப்பாண தீபகற்பத்தில் உயர்தர வகுப்புகளில் படிக்கும் 161 மாணவர்களுக்காக 2020 ஆகஸ்ட் 30 அன்று வட கடலில் கடல் சுற்று பயணமொன்று கடற்படை ஏற்பாடு செய்துள்ளது.

01 Sep 2020

வடக்கு மற்றும் தெற்கு கடற்கரைகள் கடற்படையின் பங்களிப்பால் சுத்தம் செய்யப்பட்டன

தீவைச் சுற்றியுள்ள கரையோரப் பகுதியை மாசு இல்லாத மண்டலமாக பராமரிக்க கடற்படை பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் படி வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் கடற்கரைகளை கடந்த வாரம் கடற்படையினரால் சுத்தம் செய்யப்பட்டன.

01 Sep 2020

கடற்படையினரால் நிறுவப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் பொது மக்களுக்காக திறந்து வைப்பு

திஸ்ஸமஹாராம தெபரவெவ தேசிய பாடசாலையில் கடற்படையினரால் நிறுவப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் நீர்ப்பாசன அமைச்சரும் உள்ளக பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சருமான சமல் ராஜபக்ஷவினால் நேற்றைய தினம் (31) திறந்து வைக்கப்பட்டது.

31 Aug 2020

மஹியங்கனை பிரதேச வாசிகள் ஆயிரம் பேருக்கு கடற்படையினரால் சுத்தமான குடிநீர் வசதிகள் ஏற்பாடு

மஹியங்கனையில் உள்ள வவுகம்பஹா மற்றும் பெலிகல்ல பிரதேசத்தில் நீண்ட காலமாக நிலவிவந்த சுத்தமான குடிநீருக்கான தேவையினை நிவர்த்தி செய்யும் வகையில் கடற் படையினரால் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் ஒன்று நேற்றைய தினம் (29) ஸ்தாபிக்கப்பட்டது.

29 Aug 2020

ரியர் அட்மிரல் பிரெட் செனெவிரத்ன கடற்படை சேவையிலிருந்து விடைபெற்றார்

ரியர் அட்மிரல் பிரெட் செனெவிரத்ன இன்று (2020 ஆகஸ்ட் 25) 33 ஆண்டுகளுக்கும் மேலான தனது புகழ்பெற்ற கடற்படை சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்.

25 Aug 2020

கடற்படைத் தளபதி பெல்லன்வில ரஜ மஹா விஹாரையின் வருடாந்திர எசல பெரஹரவில் கலந்து கொண்டார்

பெல்லன்வில ரஜமஹ விஹாரையின் வருடாந்திர எசலா விழா மற்றும் பெரஹெர 2020 ஆகஸ்ட் 19 முதல் ஆகஸ்ட் 23 வரை நடைபெற்றது. 2020 ஆகஸ்ட் 22 ஆம் திகதி நடைபெற்ற ‘பாவாட பெரஹெர’ நிகழ்வில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன பங்கேற்றார்.

24 Aug 2020

அடிப்படை பயிற்சியை பூர்த்தி செய்த 362 கடற்படையினரின் வெளியேறல் அணிவகுப்பு

இலங்கை கடற்படையின் 240 வது நிரந்தர ஆட்சேர்ப்பின் 362 கடற்படை வீரர்கள் அவர்களின் அடிப்படை பயிற்சியை பூர்த்தி செய்து 2020 ஆகஸ்ட் 21 ஆம் திகதி பூஸ்ஸ இலங்கை கடற்படை கப்பல் நிபுனவில் நடந்த அணிவகுப்பு வைபவத்தின் போது வெளியேறிச் சென்றனர். இந்நிகழ்விற்கு கடற்படை பணிப்பாளர் நாயகம் பயிற்சி, ரியர் அட்மிரல் ஏ.ஏ,ஆர்.கே பெரேரா பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.

22 Aug 2020

வட மத்திய கடற்படை கட்டளையில் புதிதாக கட்டப்பட்ட மத்திய யன்மார் பட்டறை திறக்கப்பட்டன

வட மத்திய கடற்படை கட்டளையில் புதிதாக கட்டப்பட்ட யன்மார் முதன்மை இயந்திர பழுதுபார்க்கும் பட்டறை 2020 ஆகஸ்ட் 18 அன்று இலங்கை கடற்படை கப்பல் பண்டுகாபயவில் வட மத்திய கடற்படை கட்டளைத் தளபதியால் திறந்து வைக்கப்பட்டது.

22 Aug 2020

கடற்படைத் தளபதி கொழும்பு பேராயர் அதி மேதகு மெல்கம் கார்தினல் ரஞ்சித் அருட்தந்தையை சந்தித்தார்

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன இலங்கை கடற்படையின் 24 வது தளபதியாக நியமிக்கப்பட்ட பின் கொழும்பு பேராயர் அதி மேதகு மெல்கம் கார்தினல் ரஞ்சித் அருட்தந்தையை இன்று (2020 ஆகஸ்ட் 21) கொழும்பிலுள்ள அவருடைய உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்து கடற்படையின் எதிர்கால பணிகளுக்கு ஆசீர்வாதங்களைப் பெற்றார்.

22 Aug 2020