ஹரித டிவி தொலைக்காட்சி அலைவரிசை ஆரம்பிக்கும் விழாவில் கடற்படைத் தளபதி கலந்து கொண்டார்

கொழும்பு, ஹுனுப்பிட்டிய – கங்காராம விகாரையில் இயங்கும் ஶ்ரீ ஜினரத்ன கல்வி நிறுவகத்தின் நிர்வாக சபையினரால் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த தொலைக்காட்சி அலைவரிசையின் தொடக்க ஒளிபரப்பு இன்று (2021 மார்ச் 31) அதி மேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவும் கலந்து கொண்டார்.

31 Mar 2021

சந்தஹிரு சேய தூபியின் நாற்சதுரத்தினுள் புதையல்களை வைப்புச் செய்யும் மகோட்ஷவத்தில் கடற்படைத் தளபதி கலந்து கொண்டார்

சந்தஹிரு சேய தூபியின் நாற்சதுரத்தினுள் புதையல் பொருட்கள் மற்றும் புனித நினைவுச் சின்னங்களை வைப்புச் செய்யும் மகோட்ஷவம் இன்று (2021 மார்ச் 28) பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) அவர்களின் தலைமையில் அனுராதபுரம் புனித நகரத்தில் தூபி அமையப்பெற்றுள்ள வளாகத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்ச்சியில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன மற்றும் கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சந்திமா உலுகேதென்ன கலந்து கொண்டனர்.

28 Mar 2021

241 ஆம் ஆட்சேர்ப்பின் அடிப்படை பயிற்சியை பூர்த்தி செய்த 377 கடற்படையினரின் வெளியேறல் அணிவகுப்பு

இலங்கை நிரந்தர மற்றும் தன்னார்வ கடற்படையின் 241 ஆம் ஆட்சேர்ப்பின் 377 வீரர்கள் அவர்களின் அடிப்படை பயிற்சியை பூர்த்தி செய்து 2021 மார்ச் 27 ஆம் திகதி பூனாவை கடற்படை கப்பல் சிக்ஷா நிருவனத்தில் நடந்த அணிவகுப்பு வைபவத்தின் போது வெளியேறிச் சென்றனர்.

28 Mar 2021

OCEANLUST மின்சார இதழ் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட 2021 ஆம் ஆண்டின் முதல் பவளப்பாறை சுத்தம் செய்தல் திட்டம் கடற்படைத் தளபதியின் தலைமையில்

OCEANLUST மின்சார இதழ் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட 2021 ஆம் ஆண்டின் முதல் பவளப்பாறை சுத்தம் செய்தல் திட்டத்தின் தொடக்க விழா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவின் தலமையில் இன்று (2021 மார்ச் 27) உஸ்வெடகெய்யாவ Malima Club House மண்டபத்தில் நடைபெற்றது. இந்த திட்டத்தின் போது களனி ஆற்றின் முகப்பில் இருந்து வடக்கு நோக்கி விரிந்திருக்கும் பவளப்பாறைகளை மற்றும் கடற்கரையை சுத்தம் செய்யப்பட்டது.

27 Mar 2021

கடற்படையின் புதிய துனை தலைமை அதிகாரி ரியர் அட்மிரல் மெரில் சுதர்ஷன கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு

கடற்படையின் புதிய துனை தலைமை அதிகாரியாக ரியர் அட்மிரல் மெரில் சுதர்ஷன நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் இன்று (2021 மார்ச் 26) கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவை சந்தித்தார்.

26 Mar 2021

17 வது ஆட்சேர்ப்பின் தொழில்நுட்ப பிரிவு கடற்படையினரின் வெளியேறல் அணிவகுப்பு

இலங்கை நிரந்தர கடற்படையின் 17 வது ஆட்சேர்ப்பு தொழில்நுட்ப பிரிவின் 27 கடற்படை வீரர்கள் தனது அடிப்படை பயிற்சியை பூர்த்தி செய்து இன்று (2021 மார்ச் 23) வெலிசர, கடற்படை தொழில்நுட்ப நிறுவனத்தின் இடம்பெற்ற அணிவகுப்பு வைபவத்தின் போது வெளியேறிச் சென்றனர். இந்நிகழ்விற்கு தன்னார்வ கடற்படையின் தளபதி ரியர் அட்மிரல் சனத் உத்பல பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.

23 Mar 2021

கடற்படை சேவா வனிதா பிரிவு உலக வன தினத்தை முன்னிட்டு மரம் நடும் திட்டமொன்றை நடத்தியது

கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சந்திமா உலுகேதென்னவின் கருத்தின் படி 2021 மார்ச் 21 ஆம் திகதி ஈடுபட்ட உலக வன தினத்தை முன்னிட்டு கடற்படை சேவா வனிதா பிரிவு அனைத்து கடற்படை கட்டளைகளையும் உள்ளடக்கி மரம் நடும் திட்டமொன்றை ஏற்பாடு செய்தது. அதன் படி மேற்கு கடற்படை கட்டளையில் நடைபெற்ற நிகழ்வு சேவா வனிதா பிரிவின் தலைவியின் அழைப்பின் பேரில், கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்வின் தலைமையில் 2021 மார்ச் 21 அன்று வெலிசர இலங்கை கடற்படை கப்பல் கெமுனு நிறுவனத்தில் நடைபெற்றது.

22 Mar 2021

ரியர் அட்மிரல் ருவன் பெரேரா கடற்படையின் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டார்

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் தலைவரும், ஆயுதப்படைகளின் தலைவருமான ஜனாதிபதி அதிமேதகு கோட்டபய ராஜபக்ஷ அவர்கள் ரியர் அட்மிரல் ருவன் பெரேராவை இலங்கை கடற்படையின் தலைமை அதிகாரியாக 2021 மார்ச் 21 திகதி முதல் அமல்படுத்தினார். அதன் படி, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன குறித்த நியமனக் கடிதத்தை அதிகாரப்பூர்வமாக ரியர் அட்மிரல் ருவன் பெரேராவுக்கு வழங்கினார்.

22 Mar 2021

ரியர் அட்மிரால் சுமித் வீரசிங்க கடற்படை சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்

36 ஆண்டுகளுக்கும் மேலான தனது புகழ்பெற்ற கடற்படை சேவையிலிருந்து ரியர் அட்மிரல் சுமித் வீரசிங்க இன்று (2021 மார்ச் 21) ஓய்வு பெற்றார்.

21 Mar 2021

கடற்படையினரால் புதுப்பிக்கப்பட்ட மிதி படகொன்று கராபிட்டி போதனா வைத்தியசாலைக்கு நன்கொடையாக வழங்கப்பட்டது

கடற்படையினரால் கடந்த ஆண்டில் புதிதாக கட்டப்பட்ட நோய்த்தடுப்பு பராமரிப்பு பிரிவுக்கான (Palliative Care Unit) வார்டு வளாகத்தின் ஓராண்டு நிறைவை முன்னிட்டு குறித்த வைத்தியசாலை ஏற்பாடு செய்திருந்த ஒரு நிகழ்ச்சியின் போது வார்டு வளாகத்தில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் மன ஆரோக்கியத்திற்காக கடற்படையினரால் புதுப்பிக்கப்பட்ட மிதி படகொன்று தெற்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் பிரியந்த பெரேராவின் தலைமையில் நன்கொடையாக வழங்கப்பட்டது.

20 Mar 2021