நிகழ்வு-செய்தி

பிரதான பழுதுபார்ப்புகளுக்குப் பிறகு சீஜி 405 படகு கடலோர காவல்படையிடம் ஒப்படைக்கப்பட்டது

இலங்கை கடற்படை மூலம் பிரதான பழுதுபார்ப்பு (Major refit) நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட இலங்கை கடலோர காவல்படையின் சீஜி 405 படகு மீண்டும் இலங்கை கடலோர காவல்படையிடம் ஒப்படைக்கும் நிகழ்வு வடக்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் பிரியந்த பெரேராவின் தலைமையில் 2021 ஜூன் 16 ஆம் திகதி இடம்பெற்றது.

18 Jun 2021

ரியர் அட்மிரல் சனத் உத்பல கடற்படை சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்

34 ஆண்டுகளுக்கும் மேலான தனது புகழ்பெற்ற கடற்படை சேவையிலிருந்து ரியர் அட்மிரல் சனத் உத்பல இன்று (2021 ஜூன் 14) ஓய்வு பெற்றார்.

14 Jun 2021

தன்னார்வ கடற்படையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் உபுல் டி சில்வா கடமையேற்பு

இலங்கை தன்னார்வ கடற்படையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் உபுல் டி சில்வா இன்று (ஜூன் 14, 2021) இலங்கை தன்னார்வ கடற்படை தலைமையகத்தில் கடமைகளை ஏற்றுக்கொண்ட பின் கடற்படைத் தலைமைகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவை சந்தித்தார்.

14 Jun 2021

பூஸ்ஸ இடைநிலை சிகிச்சை மையத்திற்கு பல மருத்துவ உபகரணங்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் நன்கொடையாக வழங்கப்பட்டன

இலங்கை கடற்படையால் பராமரிக்கப்படும் பூஸ்ஸ கொவிட் 19 இடைநிலை சிகிச்சை மையத்திற்குத் தேவையான மருத்துவ பொருட்கள், படுக்கைகள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களை லீசன்ஸ் வைத்தியசாலை மற்றும் டயலொக் நிருவனம் மனுசத் தெரண மனிதாபிமான செயல்பாட்டுத் திட்டத்துடன் இணைந்து தெற்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் பிரசன்ன ஹெவகேவிடம் வழங்கும் நிகழ்வு 2021 ஜூன் 04 மற்றும் 11 ஆம் திகதிகளில் தெற்கு கடற்படை கட்டளைத் தலைமையகத்தில் இடம்பெற்றது.

12 Jun 2021

வட கடலில் செயற்கை சுற்றுச்சூழல் அமைப்புகளை உருவாக்கும் திட்டம்

கடற்படையின் உதவியுடன் மீன்வள மற்றும் நீர்வளத் துறை இன்று (ஜூன் 11, 2021) நெடுந்தீவு கடல் பகுதியில் செயற்கை பாறைகளை வளர்ப்பதற்கான ஒரு திட்டத்தை தொடங்கியது. இந்த திட்டத்தின் மூலம், யாழ்ப்பாண தீபகற்பத்தில் உள்ள தீவுகளுக்கு வெளியே உள்ள கடலோர நீரில் பல்லுயிர் பெருக்கம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

11 Jun 2021

இந்திய கடலோர காவல்படையின் ‘சமுத்ர பிரஹாரி’, 'வஜ்ரா' மற்றும் 'வெபாவு' ஆகிய கப்பல்களின் பங்களிப்பை கடற்படைத் தளபதியின் பாராட்டுக்கு

2021 மே மாதம் 20 ஆம் திகதி கொழும்பு துறைமுக கடல் பகுதியில் தீ விபத்துக்குள்ளான MV X-PRESS PEARL என்ற கப்பலில் பேரழிவு நிலைமையை நிர்வகிக்க மற்ற பங்குதாரர்களுடன் இணைந்து செய்த சிறந்த பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் இன்று (ஜூன் 10, 2021)கொழும்பு துறைமுகத்தில் வைத்து இந்திய கடலோர காவல்படையின் ‘சமுத்ர பிரஹாரி’(ICGS Samudra Prahari ), 'வஜ்ரா' (ICGS Vajra) மற்றும் 'வெபாவு' (ICGS Vaibhav) ஆகிய கப்பல்களின் கட்டளை அதிகாரிகளுக்கு கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன பாராட்டு கடிதங்களை வழங்கினார்.

10 Jun 2021

கடற்படையின் பங்களிப்புடன் கம்பஹ, வெரெல்லவத்த பகுதியில் கட்டப்படுகின்ற கொவிட் 19 இடைநிலை சிகிச்சை மையத்தின் முதல் கட்டம் திறந்து வைக்கப்பட்டது

தற்போதுள்ள கோவிட் 19 அபாயத்தை எதிர்கொண்டு சுகாதாரத் துறையின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான அரசாங்க திட்டங்களுக்கு ஆதரவாக கம்பஹ, வெரெல்லவத்த பகுதியில் மூடப்பட்ட தொழிற்சாலை யொன்று கடற்படையின் பங்களிப்பால் கொவிட் 19 இடைநிலை சிகிச்சை மையமொன்றாக மாற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதுடன் 650 படுக்கைகள் கொண்ட இந்த சிகிச்சை மையத்தின் முதல் கட்டத்தை 2021 ஜூன் 07 ஆம் திகதி சுகாதார அமைச்சர் கெளரவ பவித்ரா வன்னியராச்சி அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.

08 Jun 2021

நாளந்தா கல்லூரியின் 85 வது பழைய சிறுவர் சங்கத்தினால் பூஸ்ஸ இடைநிலை சிகிச்சை மையத்திற்கு பல பொறுட்கள் நன்கொடையாக வழங்கப்பட்டன

கடற்படையால் பராமரிக்கப்படும் பூஸ்ஸ கொவிட் 19 இடைநிலை சிகிச்சை மையத்தின் பயன்பாட்டிற்கான பொருட்களை நாளந்தா கல்லூரியின் 85 வது பழைய சிறுவர் சங்கத்தினால் தெற்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் பிரசன்ன ஹெவகேவிடம் வழங்கும் நிகழ்வு 2021 ஜூன் 03 ஆம் திகதி தெற்கு கடற்படை கட்டளை தலைமையகத்தில் இடம்பெற்றது.

04 Jun 2021

வெளிச்செல்லும் ரஷ்ய பாதுகாப்பு ஆலோசகர் கடற்படை தளபதியுடன் சந்திப்பு

இலங்கையில் உள்ள ரஷ்ய கூட்டமைப்பு தூதரகத்தில் இராணுவம், விமானம் மற்றும் கடற்படை பாதுகாப்பு ஆலோசகர் பதவியில் இருந்து ஓய்வு பெறவிருக்கும் கர்னல் டெனிஸ் ஐ ஸ்கோடா (Colonel Denis I. Shkoda) அவர்கள் இன்று (2021 ஜூன் 03) கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவை சந்தித்தார்.

03 Jun 2021

சேவா வனிதா பிரிவு மூலம் கிழக்கு கடற்படை கட்டளையில் இரத்த தான நிகழ்வொன்று நடத்தப்பட்டது

கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சந்திமா உலுகேதென்னவின் கருத்துப் படி கடற்படை சேவா வனிதா பிரிவு மூலம் அனைத்து கடற்படை கட்டளைகளையும் உள்ளடக்கி 2021 மே 24 ஆம் திகதி ஏற்பாடு செய்யப்பட்ட இரத்த தான நிகழ்வுக்கு இணையாக கிழக்கு கடற்படை கட்டளையில் ஏற்பாடு செய்யப்பட்ட இரத்த தான நிகழ்வு துனை தலைமை அதிகாரி மற்றும் கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் வய்.என்.ஜெயரத்னவின் பங்கேற்புடன் இன்று (2021 மே 30) இலங்கை கடற்படை கப்பல் 'திஸ்ஸ' சேவா வனிதா முன்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

30 May 2021