நிகழ்வு-செய்தி
இந்து - லங்கா கடற்படை கூட்டுப்பயிற்சியில் 'SLINEX-2019' கலந்து கொள்வதற்காக சிந்துரல மற்றும் சுரனிமில கப்பல்கள் இந்தியாவுக்கு பயணம்

இலங்கை மற்றும் இந்திய கடற்படை வீரர்கள் இணைந்து பங்குகொள்ளும் 2019ஆம் ஆண்டுக்கான இந்து - லங்கா கடற்படை கூட்டுப்பயிற்சியில் (Sri Lanka India Naval Exercise - SLINEX 2019) கலந்து கொள்வதற்காக கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் ஆலோசனையின் படி இலங்கை கடற்படைக்குச் சொந்தமான சிந்துரல மற்றும் சுரனிமில ஆகிய இரண்டு கடற்படை கப்பல்கள் திருகோணமலை துறைமுகத்திலிருந்து இந்தியா நோக்கி இன்று (செப்டெம்பர், 05) பயணித்துள்ளது.
05 Sep 2019
சட்டவிரோத வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இருவர் கைது செய்ய கடற்படை உதவி

கடற்படை மற்றும் பொலிஸார் இனைந்து 2019 செப்டம்பர் 3 ஆம் திகதி கல்முனை சயிந்தமருது பகுதியில் நடத்திய சோதனையின் போது 10 பாக்கெட் சட்டவிரோத வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
04 Sep 2019
சுகயீனமுற்றிருந்த மீனவர் ஒருவரை சிகிச்சைக்காக கரைக்கு கொண்டு வர கடற்படையினர் ஆதரவு வழங்கியது

மீன் பிடி நடவடிக்கைகளுக்காக சென்றிருந்த வேளையில் கடுமையாக சுக்கையீனமுற்ற மீனவர் ஒருவர் கடற்படையினரின் உதவியுடன் சிகிச்சைக்காக இன்று (செப்டம்பர் 04) கரைக்கு கொண்டுவரப்பட்டார்.
04 Sep 2019
250 கிராம் கேரள கஞ்சாவுடன் இரண்டு பேர் கடற்படையினரினால் கைது

கடற்படை மற்றும் கோன்னொருவ போலீஸ் சிறப்பு பணிக்குழு இனைந்து ஹம்பாந்தோட்டை மிரிஜ்ஜவில பகுதியில் வைத்து 2019 செப்டம்பர் 03 <ம் திகதி 250 கிராம் கேரள கஞ்சா கொண்ட இரண்டு நபர்களை கைது செய்தனர்.
04 Sep 2019
சந்தேகத்திற்கிடமான முச்சக்கர வண்டியில் இருந்த 02.16 கிலோ கிராம் கேரள கஞ்சாவை கண்டுபிட்டிக்க கடற்படை உதவியது

கடற்படை மற்றும் போலீஸ் போதைப்பொருள் தடுப்பு பணியகம் இணைந்து 2019 செப்டம்பர் 03 ஆம் திகதி யாழ்ப்பாணம் காரைநகர் பகுதியில் வைத்து 02.16 கிலோகிராம் கேரள கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளன.
04 Sep 2019
கடற்படை குடும்பங்களின் குழந்தைகளுக்காக எந்திர அறிவியல் குறித்த பட்டறை கொழும்பில் நடைபெற்றது

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் அறிவுறுத்தல்களில் கீழ், கடற்படை குடும்பங்களின் குழந்தைகளின் நலனுக்காக எந்திர அறிவியல் குறித்த பட்டறையொன்று நடைபெற்றது.
03 Sep 2019
தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 12 நபர்களை கடற்படையால் கைது

வனாதவில்லுவ கல்லடிய குளம் பகுதியில் அங்கீகரிக்கப்படாத மீன்பிடி வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 12 பேரை 2019 செப்டம்பர் 02 ஆம் திகதி கடற்படை கைது செய்தது.
03 Sep 2019
தடைசெய்யப்பட்ட 14.4 கிலோகிராம் மீன்பிடி வலைகளுடன் ஒருவர் கடற்படையினரினால் கைது

கடற்படை மற்றும் யாழ்ப்பாணம் விசேட அதிரடிப் படை அதிகாரிகள் ஒருங்கிணைந்து 14.4 கிலோகிராம் அங்கீகரிக்கப்படாத வலைகளைக் கொண்ட ஒருவரை யாழ்ப்பாணம் பகுதியில் வைத்து 2019 செப்டம்பர் 02 ஆம் திகதி கைது செய்துள்ளனர்.
03 Sep 2019
550 கிலோகிராம் பீடி இலைகளை கடற்படை நடவடிக்கை மூலம் கண்டுபிடிக்கப்பட்டது

கடற்படை இன்று (செப்டம்பர் 02) இரனைதீவு பகுதிகளில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது பல பீடி இலை பொதிகளை மீட்டது.
02 Sep 2019
கடற்படை சர்வதேச கடலோர தூய்மை தினத்தை முன்னிட்டு கடற்கரை சுத்தப்படுத்தும் திட்டமொன்று காலி முகத்திடலில் நடத்தியது

சர்வதேச தூய்மை தினத்தை முன்னிட்டு இன்று (செப்டம்பர் 02) காலி முகத்திடலில் கடற்கரை சுத்தம் செய்யும் திட்டமொன்றை கடற்படை தொடங்கியுள்ளது.
02 Sep 2019