நிகழ்வு-செய்தி

கடற்படையினரால் 4 கிலோ கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது
 

கடற்படை புலனாய்வு குழுவினரால் கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய வடக்கு கடற்படை கட்டளை பிரதேசத்தின் ஊர்காவற்துறையி, கடற்படை கப்பல் கஞ்சதேவ மற்றும் மண்டை தீவு கடற்படை கப்பல் வேலுசுமன வின் கடற்படை வீரர்களினால் நேற்று (ஆகஸ்ட் 18) திருநெல்வேளிப் பகுதியில் வைத்து 4 கிலோ கேரளா கஞ்சாவை கொண்டு சென்ற ஒருவர் பருத்தித்துறை மதுவரி அதிகாரிகளின் உதவியுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

19 Aug 2016

கடற்படையினரால் 26.75 கிலோ கேரளா கஞ்சாவுடன் மூவர் கைது

வடக்கு கடற்படை கட்டளை பிரதேசத்தின் வெத்திளைகேனியிலுள்ள கடற்படை பிரிவின் வீரர்களால் 13 பொதிகளில் வெவ்வேறாக பொதி செய்யப்பட்டு 26.75 கிலோ கேரளா கஞ்சாவை கொண்டு சென்ற மூவர் சம்பியன்பத்து பிரதேசத்தில் வைத்து நேற்று (17) கைது செய்யப்பட்டனர்.

18 Aug 2016

இந்திய கரையோர பாதுகாப்பு படை கப்பல் “சமர்த்” கொழும்பு வருகை

நல்லெண்ண விஜயமொன்றை மேற்கொண்டு இந்திய கரையோர பாதுகாப்பு படை கப்பல் “சமர்த்” இன்று (18 ஆகஸ்ட்) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

18 Aug 2016

2 கிலோ கஞ்சா கொண்டு சென்ற நபர் கடற்படையினரால் கைது
 

வடமேற்கு கடற்படை கட்டளை பிரதேசத்திற்குட்பட்ட முள்ளிக்குளம், கடற்படை கப்பல் பரண வின் வீரர்களால் 2 கிலோ கேரள கஞ்சாவை கொண்டு சென்ற ஒரு நபர் நேற்று (17 ஆகஸ்ட் ) மரிச்சுக்கட்டியில் வைத்து கைதுசெய்யப்பட்டார்.

18 Aug 2016

முதலாம் நடமாடும் நீர் சுத்திகரிப்பு இயந்திரம் மக்கள் பாவனைக்கு
 

மற்றுமொரு சமூக நலன்புரி சேவையாக இலங்கை கடற்படை முதலாம் முறையாக ஒரு நடமாடும் நீர் சுத்திகரிப்பு இயந்திரமொன்றை ஹம்பேகமுவை பகுதி மக்களின் பாவனைக்காக நேற்று (16 ஆகஸ்ட்) முதல் துவக்கிவைத்தது.

18 Aug 2016

பங்களாதேஷ் தேசிய பாதுகாப்புக் கல்லூரியின் தூதுக்குழுவினர் கடற்படை தலைமையகத்திற்கு வருகை
 

மேஜேர் ஜெனரல் ஹமிதுர் ரஹ்மான் சௌத்ரி அவர்களின் தலைமையில், பங்களாதேஷ் தேசிய பாதுகாப்புக் கல்லூரியின் உயர் மட்டக் பிரதிநிதிகள் குழு ஒன்று இன்று (16) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்களை கடற்படை தலைமையகத்திலே வைத்து சந்தித்தது.

17 Aug 2016

கடலில் தத்தளித்த 3 மீனவர்கள் கடற்படையினரால் மீட்பு

தெற்கு கடற்படை கட்டளை பிரதேசத்திட்குட்பட்ட பானமை, கடற்படை கப்பல் மகானாக வின் வீரர்களால் ‘நலீஷ புதா 4’ எனும் மீன்பிடி படகில் சென்ற 3 மீனவர்கள் நேற்று (15) மீட்கப்பட்டார்கள்.

16 Aug 2016

பாதுகாப்பு சேவைகள் ஹொக்கி போட்டியில் கடற்படை வெற்றி
 

விளையாட்டு அமைச்சு ஹொக்கி மைதானத்தில் கடந்த 9 தொடக்கம் 12ஆம் (ஆகஸ்ட் 2016) திகதி வரை 9ஆம் முறையாக நடந்தப்பட்ட பாதுகாப்பு சேவைகள் ஹொக்கி போட்டித் தொடரில் கடற்படையின் ஆண்கள் மற்றும் பெண்கள் அணி சரித்திரத்தில் முதன் முறையாக சாம்பியன்ஷிப் பட்டத்தை சுவீகரித்து சாதனை படைத்துள்ளதன.

16 Aug 2016

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முயன்ற 18 நபர்கள் கடற்படையால் கைது
 

சட்டவிரோதமான முறையில் படகொன்றின் மூலம் அவுஸ்திரேலியா செல்ல முயன்ற இலங்கையர்கள் 18 பேர், மட்டக்கிளப்பிற்கு 40 கடல் மைல்களுக்கப்பால் உள்ள கடற்பரப்பில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

16 Aug 2016

பிரான்ஸ் நாட்டு கடற்படை கப்பல் ‘ரேவி’ திருகோணமலை துறைமுகத்திற்கு வருகை
 

நல்லெண்ண விஜயமொன்ரை மேற்கொண்டு பிரான்ஸ் நாட்டு கடற்படை கப்பல் ‘ரேவி’, திருகோணமலை துறைமுகத்தை இன்று காலை (ஆகஸ்ட் 15) வந்தடைந்தது.

15 Aug 2016