நிகழ்வு-செய்தி

யுத்தத்தின் போது ஊனமுற்ற வீரர்களுக்காக “மிஹிந்து செத் மெதுரவில்” நடத்தப்பட்ட சிறப்பு இரவு விருந்து நிகழ்வில் கடற்படைத் தளபதி பங்கேற்பு

யுத்தத்தின் போது ஊனமுற்ற வீரர்களின் நலனுக்காக இலங்கை இராணுவத்தால் பராமரிக்கப்படுகின்ற மிஹிந்து செத் மெதுர நிலையத்தில் தங்கி இருக்கும் ஊனமுற்ற இராணுவ உறுப்பினர்களுக்காக பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவு நடத்திய சிறப்பு இரவு விருந்து 2021 பிப்ரவரி 20 ஆம் திகதி பாதுகாப்பு செயலாளர், ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன மற்றும் பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சித்ராணி குணரத்ன ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்ச்சியில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன மற்றும் கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சந்திமா உலுகேதென்ன கழந்து கொண்டனர்.

21 Feb 2021

அட்மிரல் கிளான்சி பெர்னாண்டோ நினைவு சொற்பொழிவில் கடற்படைத் தளபதி கலந்து கொண்டார்

அட்மிரல் கிளான்சி பெர்னாண்டோவை கெளரவிப்பதற்காக தேசிய பாதுகாப்பு ஆய்வுகள் நிறுவனம் ஏற்பாடு செய்த நினைவு சொற்பொழிவு 2021 பிப்ரவரி 19 அன்று பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன தலைமையில் பத்தரமுல்ல சுஹுருபாயவில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவும் கலந்து கொண்டார்.

20 Feb 2021

கப்பல்களுக்கு பாதுகாப்பாக அணுகல்,சோதனை செய்தல், கைது செய்தல், மேம்படுத்தப்பட்ட வெடி மருந்து சாதனகள் அடையாளம் காணுதல் மற்றும் தடுத்தல் குறித்த பாடநெறி திட்டம் திருகோணமலையில் வெற்றிகரமாக நிறைவடைந்தது (VBSS C-IED)

போதைப்பொருள் மற்றும் குற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் அலுவலகத்தின் உலகளாவிய கடல்சார் குற்றத் திட்டத்தின் மேற்பார்வையின் கீழ் இலங்கை கடற்படையின் சிறப்பு படகு படை நடத்திய கப்பல்களுக்கு பாதுகாப்பாக அணுகல், சோதனை செய்தல், கைது செய்தல், மேம்படுத்தப்பட்ட வெடி மருந்து சாதனகள் அடையாளம் காணுதல் மற்றும் தடுத்தல் பாடநெறி திட்டம் 2021 பிப்ரவரி 19 அன்று திருகோணமலையில் வெற்றிகரமாக நிறைவடைந்தது.

20 Feb 2021

130 மூத்த கடற்படை வீரர்களுக்கு மற்றும் 20 இளைய கடற்படை வீரர்களுக்கு வட்டியற்ற கடன் வழங்கப்பட்டன

இலங்கை கடற்படையில் பணி யாற்றும் 130 மூத்த கடற்படை வீரர்களுக்கு ரூபா 500,000,00 மற்றும் 20 இளைய கடற்படை வீரர்களுக்கு ரூபா 200,000,00 பெருமதியான வட்டியற்ற கடன் வழங்குகின்ற நிகழ்வு இன்று (2021 பிப்ரவரி 18) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன தலைமயில் இலங்கை கடற்படை தலைமையகத்தில் இடம்பெற்றது.

18 Feb 2021

பாகிஸ்தானில் இடம்பெற்ற “அமான் 2021” பலதரப்பு பயிற்சியில் இலங்கை கடற்படை கப்பல் கஜபாஹு பங்கேற்பு

பாகிஸ்தான் கடற்படை 'சமாதானத்திற்காக ஒன்றாக' (Together for Peace) என்ற கருப்பொருளின் கீழ் ஏழாவது முறையாக ஏற்பாடு செய்கின்ற பலதரப்பு அமான் (AMAN 2021) கடற்படை பயிற்சி 2021 பிப்ரவரி 12 அன்று பாகிஸ்தான், கரச்சியில் உள்ள கடற்படை கப்பல்துறை வளாகத்தில் தொடங்கியது. இந்த கடற்படை பயிற்சியில் இலங்கை கடற்படைக் கப்பல் கஜபாஹு பங்கேற்றது.

18 Feb 2021

கடற்படையின் புதிய துனை தலைமை அதிகாரி ரியர் அட்மிரல் ருவன் பெரேரா கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு

கடற்படையின் புதிய துனை தலைமை அதிகாரியாக ரியர் அட்மிரல் ருவன் பெரேரா நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் இன்று (2021 பிப்ரவரி 16) கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவை சந்தித்தார்.

16 Feb 2021

ரியர் அட்மிரால் டி.கே.பி தசநாயக்க கடற்படை சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்

33 ஆண்டுகளுக்கும் மேலான தனது புகழ்பெற்ற கடற்படை சேவையிலிருந்து ரியர் அட்மிரல் டி.கே.பி தசநாயக்க இன்று (2021 பிப்ரவரி 16) ஓய்வு பெற்றார்.

16 Feb 2021

ரியர் அட்மிரல் வய்.என்.ஜெயரத்ன கிழக்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக கடமைகளை ஏற்றுக்கொண்டார்

கிழக்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் வய்.என்.ஜெயரத்ன இன்று (2021 பிப்ரவரி 15) கிழக்கு கடற்படை கட்டளை தலைமையகத்தில் கடமைகளை ஏற்றுக்கொண்டார்.

15 Feb 2021

ரியர் அட்மிரல் பந்துல சேனாரத்ன வடமேற்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக கடமைகளை ஏற்றுக்கொண்டார்

வடமேற்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் பந்துல சேனாரத்ன இன்று (2021 பிப்ரவரி 15) வடமேற்கு கடற்படை கட்டளை தலைமையகத்தில் கடமைகளை ஏற்றுக்கொண்டார்.

15 Feb 2021

தீகவாபி தூபின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்காக கடற்படையால் 05 மில்லியன் ரூபா நன்கொடை

தீகவாபி தூபின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்காக நிதி சேர்க்கும் விழா இன்று (2021 பிப்ரவரி 12) கொழும்பு 07, சம்போதி விஹாரயவில் அதி மேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவின் போது, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன தீகவாபி தூபின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்காக 05 மில்லியன் ரூபா அதி மேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் நன்கொடையாக வழங்கினார்.

12 Feb 2021