நிகழ்வு-செய்தி

திருகோணமலை கடற்படை கப்பல்துறை வளாகத்தில் இலங்கை கடற்படைக்கு ஆசீர்வாதமலித்து கிறிஸ்துவ மத நிகழ்ச்சியொன்று நடைபெற்றது

இலங்கை கடற்படையின் 70 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட கிறிஸ்துவ மத நிகழ்ச்சி 2021 ஏப்ரல் 17 ஆம் திகதி கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன தலைமையில் திருகோணமலை பிஷப் கலாநிதி கிறிஸ்டியன் நொயெல் இமானுவேல் உள்ளிட்ட பாதிரியார்களின் பங்கேப்புடன் கடற்படை கப்பல்துறையில் உள்ள Christ the King Chapel தேவாலயத்தில் நடைபெற்றது.

18 Apr 2021

இந்திய கடற்படைக்கு சொந்தமான போர்க்கப்பலொன்று கொழும்பு துறைமுகத்துக்கு வருகை

இந்திய கடற்படைக்கு சொந்தமான “INS RANVIJAY” கப்பல் மூன்று நாள் (03) உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டு 2021 ஏப்ரல் 14 அன்று கொழும்பு துறைமுகத்திற்கு வந்தடைந்தது.

15 Apr 2021

கடற்படை தளபதியின் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி

அதிகாரிகள், மாலுமிகள், சிவில் ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் அமைதி, மகிழ்ச்சி மற்றும் செழிப்பு கொண்ட இனிய புத்தாண்டாக அமைய வேண்டும் என்று நானும் எனது குடும்பத்தினரும் வாழ்த்துக்களை தெரிவிக்கின்றோம்.

14 Apr 2021

ரியர் அட்மிரல் நிஷாந்த சமரசிங்க கடற்படை சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்

34 ஆண்டுகளுக்கும் மேலான தனது புகழ்பெற்ற கடற்படை சேவையிலிருந்து ரியர் அட்மிரல் நிஷாந்த சமரசிங்க இன்று (2021 ஏப்ரல் 12) ஓய்வு பெற்றார்.

12 Apr 2021

கடற்படையினரால் கிங் ஆற்றுப் பகுதியில் பேரழிவு மேலாண்மை பயிற்சி திட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது

கடற்படையினரால் வெள்ள நிலைமைகளை வெற்றிகரமாக சமாளிக்கும் நோக்கத்தில் பேரழிவு மேலாண்மை பயிற்சி திட்டமொன்று 2021 ஏப்ரல் 05 ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரை கிங் ஆற்றுப் பகுதியில் நடத்தப்பட்டது.

11 Apr 2021

கடற்படையின் பங்களிப்புடன் கட்டப்பட்ட லங்காகம நில்வெல்ல பாலம் பொதுமக்களுக்காக திறந்து வைக்கப்பட்டது

தெற்கு மாகாணத்தில் காலி, நெலுவ, லங்காகம மற்றும் நில்வெல்ல கிராமங்களை இணைக்கும் கடற்படையின் பங்களிப்புடன் புதிதாக கட்டப்பட்ட லங்காகம நில்வெல்ல பாலம் தெற்கு மாகாண ஆளுநர் கலாநிதி சிலி கமகே மற்றும் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னயின் பங்கேற்புடன் 2021 ஏப்ரல் 10 ஆம் திகதி பொதுமக்களுக்காக திறந்து வைக்கப்பட்டது.

11 Apr 2021

நில்வெல்ல நீருக்கடியில் கலைக்கூடம் பொதுமக்களுக்காக திறந்து வைக்கப்பட்டது.

உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் நில்வெல்ல கடற்கரை இலங்கையின் தெற்கு கடற்கரையில் உள்ள ஒரு அழகான கடற்கரையாகும், குறித்த அழகான கடற்கரையை மிகவும் கவர்ச்சிகரமானதாக மாற்ற கடற்படையின் பங்களிப்புடன் கட்டப்பட்ட நில்வெல்ல நீருக்கடியில் கலைக்கூடம் (Underwater Gallery Nilwella) இன்று (2021 ஏப்ரல் 10) கடற்படைத் தளபதி, வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவின் அழைப்பின் பேரில் இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சர் திரு நாமல் ராஜபக்‌ஷ அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.

10 Apr 2021

ரியர் அட்மிரல் செனரத் விஜேசூரிய கடற்படை சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்

34 ஆண்டுகளுக்கும் மேலான தனது புகழ்பெற்ற கடற்படை சேவையிலிருந்து ரியர் அட்மிரல் செனரத் விஜேசூரிய இன்று (2021 ஏப்ரல் 09) ஓய்வு பெற்றார்.

09 Apr 2021

72 கடற்படை வீரர்களுக்கு வட்டியற்ற கடன் வழங்கப்பட்டன

இலங்கை கடற்படையில் பணி யாற்றும் 43 மூத்த கடற்படை வீரர்களுக்கு ரூபா 500,000,00 மற்றும் 29 இளைய கடற்படை வீரர்களுக்கு ரூபா 200,000,00 பெருமதியான வட்டியற்ற கடன் வழங்குகின்ற நிகழ்வு இன்று (2021 ஏப்ரல் 07) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன தலைமயில் இலங்கை கடற்படை தலைமையகத்தில் இடம்பெற்றது.

07 Apr 2021

கொழும்பு பாதுகாப்பு சேவைகள் கல்லூரிக்கு பாதுகாப்பு செயலாளர் விஜயம்

பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) கொழும்பு பாதுகாப்பு சேவைகள் கல்லூரிக்கு 2021 ஏப்ரல் 05 ஆம் திகதி விஜயம் செய்தார். இந்நிகழ்வில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவும் கலந்து கொண்டார்.

06 Apr 2021